Cinema History
அப்பவே அந்த வேலையைப் பற்றி அப்பட்டமாக சொன்ன தேங்காய் சீனிவாசன்… என்ன படத்தில் தெரியுமா?
70 மற்றும் 80களில் தமிழ்ப்படங்களில் காமெடியில் பட்டையைக் கிளப்பியவர் தேங்காய் சீனிவாசன். சித்தூர் சீனிவாசன் தான் இவரது இயற்பெயர். ஒரு தடவை தேங்காய் என்ற பாத்திரத்தில் நடித்தாராம். அதில் இருந்து தேங்காய் சீனிவாசன் ஆனார்.
சினிமா கனவுகளுடன் வரும் இளைஞர்கள் பெரும்பாலும் ஹீரோவாக வேண்டும் என்றே வருவார்கள்.
ஆனால் இவர் காமெடியனாக வேண்டும் என்றே வந்தாராம். அதே போல காமெடியனாகவும் ஆகி விட்டார். பின்னாளில் குணச்சித்திரம், வில்லன், தயாரிப்பாளர், ஹீரோ என தன் பன்முகத்திறமைகளையும் காட்டி அசத்தியுள்ளார்.
கமல் நடித்த டிக் டிக் டிக் படத்தில் இவரது கதாபாத்திரம் ரொம்பவே வித்தியாசமானது. இவர் போட்டோ ஸ்டூடியோ ஓனர். தன் தொழிலாளி கமலுக்கு கால் கேர்ள்கள் அட்ரஸைக் கொடுப்பார். அது மட்டுமல்ல. அங்கு போய் டென்சனைக் குறைத்துக் கொள் என்பார். அப்போது அந்த சுகத்தைப் பற்றி வர்ணிப்பது ரசனையான காட்சி. இப்போது போனில் அந்த சுகத்திற்காக அழைப்பதற்கு எல்லாம் இந்தக் காட்சி தான் முன்னோடியாக இருக்கும்.
இதையும் படிங்க… காலையில் ஒரு படம்… மாலையில் இன்னொன்னு… தூங்காமல் நடித்து கொடுத்த விஜயகாந்த்..! 56 நாட்களில் ரிலீஸ்..!
தென்றலே என்னைத் தொடு என்ற மோகனின் படத்தில் அவரது மேனேஜர் தேங்காய் சீனிவாசன் தான். சனிக்கிழமையானால் கால்கேர்ள்களிடம் கட்டாயம் போக வேண்டும் என்று துடிக்கும் நடுத்தர வயதுக்காரராக வருவார். அது மாதிரி வேடம்னா இவர் அல்வா சாப்பிடுவது மாதிரி கனகச்சிதமாக நடித்து விடுவார்.
படத்தில் கால் கேர்ளிடம் போகும்போதும் சரி. மனைவி காந்திமதியை ஏமாற்றும் போதும் சரி. மனுஷன் பின்னி பெடல் எடுத்து விடுவார். ரஜினியுடன் தங்கமகன், கமலுடன் காக்கிசட்டை படங்களிலும் செம மாஸான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இவர் ஹீரோவாக நடித்த படத்தின் பெயர் நான் குடித்துக் கொண்டே இருப்பேன். என்ன ஜாலியான லைஃப் பாருங்க.
இதையும் படிங்க… விஜயகாந்த் உடன் 57 முறை நேரடியாக மோதிய சத்யராஜ் படங்கள்… ஜெயித்தது யாரு புரட்சி கலைஞரா… புரட்சித்தமிழனா?
காசே தான் கடவுளடா, தில்லு முல்லு படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டன. காசே தான் கடவுளடா படத்தில் போலிச்சாமியாராக நடித்து இருந்தார். வசனங்கள் உச்சரிக்கும்போது ஏற்ற இறக்கத்துடன் பேசி ரசிகர்களை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துவிடுவார். ரஜினியுடன் பில்லா, கழுகு, தாய்வீடு, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தன் 50வது வயதில் காலமானார்.