Connect with us

கஷ்டப்பட்ட டி.ராஜேந்தருக்கு சோறு போட்டு சினிமாவுக்கு அழைத்து வந்த நடிகர்!.. அட இது தெரியாம போச்சே!..

rajendar

Cinema History

கஷ்டப்பட்ட டி.ராஜேந்தருக்கு சோறு போட்டு சினிமாவுக்கு அழைத்து வந்த நடிகர்!.. அட இது தெரியாம போச்சே!..

ஒருதலை ராகம் எனும் திரைப்படம் மூலம் திடீரென பிரபலமானவர் டி.ராஜேந்தர். சகலகலா வித்தகர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங் என அப்படத்திற்கு அனைத்தையும் அவரே செய்தார். ஒருதலை காதலின் வலியை அப்படத்தில் காட்டியிருந்தார். அதோடு, அப்படத்தின் பாடல்களும் அப்போது செம ஹிட். அப்போதைய இளைஞர்கள் எப்படி காதல் செய்வார்களோ, காதலியிடம் எப்படி பேசுவார்கள் என அனைத்தையும் கண் முன்னாடி நிறுத்தியிருந்தார்.

rajendar

rajendar

அதன்பின் உயிருள்ள வரை உஷா, மைதிலி என்னை காதலி, தங்கைக்கோர் கீதம், என் தங்கை கல்யாணி என ரவுண்டி கட்டி அடித்தார். ரஜினி படங்களை விட அவரின் படங்கள் வசூலை அள்ளியது. இளையராஜா இசையமைக்கும் படங்களின் கேசட்டை விட அவரின் படங்களின் கேசட் அதிகமாக விற்றது. ஒருபக்கம், தனது மகன் சிலம்பரசனை சினிமாவில் சிறு வயதியிலேயே நடிக்க வைத்து நடிகராக மாற்றினார்.

rajendar

சினிமாவில் அவரின் படங்கள் ஹிட் அடித்தபின் வசதிகள் வந்தாலும், அவர் மிகவும் ஏழமையான குடும்பத்தை சேர்ந்தவர்தான். அவரின் வீட்டில் மின்சார வசதி கூட கிடையாது. ஆனாலும் படிப்பில் கவனம் செலுத்தி பி.ஏ படிப்பில் முதல் வகுப்பில் முதன்மையாக தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றிருக்கிறார். வீட்டில் இருக்கும் சிம்னி விளக்கில்தான் டி ராஜேந்தர் சவரம் செய்வாராம். ஆதலால் அடிக்கடி பிளேடு முகத்தில் கீறிவிடுமாம். இந்த காரணத்தால்தான் அவர் தாடி வைக்க துவங்கினாராம்.

thiyagu

thiyagu

இது ஒருபுறம் இருக்க, சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தானாகவே இசையமைத்து பாடல்களை எழுதி பாடும் திறன் கொண்டவர் டி.ராஜேந்தர். அவரின் திறமையை கண்டு நடிகர் தியாகு டி.ராஜேந்தர் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். அவருக்கு தங்க அறை கொடுத்து, சாப்பாட்டு போட்டு சினிமாவில் சேர்த்துவிட்டுள்ளார். இந்த விஷயத்தை டி.ராஜேந்தர் தனது உஷா பத்திரிக்கையிலும் எழுதியுள்ளார். தியாகு இல்லையேல் நான் இல்லை. தியாகு இல்லை என்றால் நான் சினிமாவுக்கே வந்திருக்க முடியாது என அவர் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதள பாதாளத்தில் விழுந்த சிவாஜி பட இயக்குனரின் குடும்பத்தை கைக்கொடுத்து தூக்கிவிட்ட எம்.ஜி.ஆர்… என்ன மனுஷன்யா!

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top