மனோரமா வீட்டில் நடந்த திருட்டு.. திருடனை துரத்தி ஓடிய கேப்டன்.. நடிகர் பகிர்ந்த தகவல்...

மதுரையிலிருந்து நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சினிமாவுக்கு வந்தவர் நடிகர் விஜயகாந்த். விஜய ராஜா என்கிற பெயரை விஜயகாந்த் என வைத்துக்கொண்டார். துவக்கத்தில் பல கஷ்டங்களை, அவமானங்களை சந்தித்த பின்னர்தான் இவர் நடிகராக மாறினார். துவக்கம் முதலே ஆக்‌ஷன் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார். ஒருகட்டத்தில் முன்னணி நடிகராகவும் மாறினார். இவரின் படங்கள் சி செண்டர் எனப்படும் கிராமம் மற்றும் நகர பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றது. ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுக்கும் நடிகராக விஜயகாந்த் இருந்தார்.

vijayakanth

நடிகர் விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல. நிஜ வாழ்விலும் ஆக்‌ஷன் ஹீரோதான். படப்பிடிப்பில் ஏதேனும் பிரச்சனை எனில் உடனே களத்தில் இறங்கி அவரே சரி செய்து விடுவார். படப்பிடிப்பில் தேவையில்லாத பிரச்சனைகளை செய்தால் விஜயகாந்திடம் பன்ச் வாங்க வேண்டியிருக்கும். படப்பிடிப்பில் நடிகைகளுக்கு காவலனாகவும் விஜயகாந்த் இருப்பார். இவர் இருந்தாலே நடிகைகளுக்கு எந்த பயமும் இருக்காது. பல சூழ்நிலைகளில் விஜயகாந்த் களத்தில் இறங்கி அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை லைவாகவே காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: அஜித் – விஜயகாந்த் மோதல்…. திட்டிய விஜயகாந்த்…. கழட்டி காட்டியதும் கலங்கிய கேப்டன்!

இதுபற்றி விஜயகாந்திடம் நெருங்கி பழகிய ராதாரவி,சந்திரசேகர் உள்ளிட்ட நடிகர்கள் பேட்டிகளில் பல சம்பவங்களை கூறியுள்ளனர். அந்த வகையில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகரும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பராகவும் இருந்த தியாகு ‘மற்ற நடிகர்களை போல விஜயகாந்த் இருக்கவே மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் எல்லோரிடமும் சஜகமாக பழகுவார்.

vijayakanth

vijayakanth

அவருக்கு தப்பென தெரிந்தால் தட்டி கேட்பார். நாம் சினிமா ஹீரோ இதையெல்லாம் செய்யக்கூடாது என எந்த இடத்திலும் யோசிக்கவே மாட்டார். ஒருமுறை நடிகை மனோரமோ வீட்டில் வேலை செய்த பெண்ணிடமிருந்து திருடன் ஒருவன் செயினை பறித்துக்கொண்டு ஓடினான். அதைப்பார்த்த விஜயகாந்த் தெருவில் இறங்கி ஓடி அவனை விரட்டி பிடித்து அடி பின்னி விட்டார். சினிமாவில் மட்டுமல்ல.. நிஜ வாழ்விலும் விஜயகாந்த் ஹீரோதான்’ என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: சினிமாவே வேண்டாம்!.. பொன்னம்பலம் எடுத்த முடிவு.. களத்தில் இறங்கி காரியம் சாதித்த விஜயகாந்த்…

 

Related Articles

Next Story