Connect with us

Cinema History

ஒரு மனுஷனுக்கு இப்படி ஒரு நிலைமை வரவே கூடாதுப்பா….! கெத்தான நடிகனுக்கு வந்த பரிதாபத்தைப் பாருங்க…!!!

சில நடிகர்கள் நடித்தப் படங்களைப் பார்க்கும் போது மிரட்டிவிடுவார்கள் நடிப்பில்…அவ்வளவு யதார்த்தமாக நடித்து இருப்பார்கள். அவர்கள் வில்லன், கதாநாயகன் என்று இல்லை. கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் என்னவோ அதற்கேற்ப நடித்து அசத்திவிடுவார்கள். குணச்சித்திர நடிகர்களும் இந்த வரிசையில் நிறைய பேர் உண்டு.

அந்த வகையில் வரும் ஒரு அசத்தலான நடிகர் தான் உதயபிரகாஷ். இவர் படத்தில் கெத்தாக நடித்திருந்தாலும் இவரது கெட்டப் பழக்க வழக்கங்கள் இவரைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டது.

அவர் யார், எப்படி தன் கெட்டப் பழக்கத்தால் கஷ்டப்பட்டார்? என்ன கெட்டப்பழக்கம்? கடைசி காலத்தில் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்று நாம் இவரது வாழ்க்கைப்பாதையைக் கடக்கும்போது நமக்கும் பயம் வந்து விடுகிறது.

இந்தக் குடிப்பழக்கம் எவ்வளவு கொடியது என்று. குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்வர். அதை அனுபவித்துப் பார்த்தால் மட்டுமல்ல.

அதனால் கஷ்டப்பட்டு இறந்து போனவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.

Actor Uthayprakash

திரையுலகில் அப்படிப்பட்ட அடிமைப் பழக்கத்திற்கு ஆளானவர் தான் இந்த உதயபிரகாஷ். இவரது குடிப்பழக்கம் எப்படி இவரது உயிரைக் குடித்ததுன்னு நாம் படித்துப் பார்க்கும்போது ஒரு கணம் நம் இதயம் வலிக்கத்தான் செய்கிறது.

சின்னத்தம்பியில் அண்ணன்

சின்னத்தம்பி படத்தில் குஷ்புவின் இரண்டாவது அண்ணனாகவும், வில்லனாகவும் நடித்தவர் உதய பிரகாஷ். இயற்பெயர் மணிகண்டன்.

கால்பந்து வீரர்

இவர் 1964 ஆம் ஆண்டு ஊட்டியில் பிறந்தவர். இவர் ஒரு சிறந்த கால்பந்து வீரரும் ஆவார். 1990 ஆம் ஆண்டு நடிகை விஜயசாந்தி நடித்து வெளிவந்த தெலுங்கு படமான வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

சின்னத்தம்பி, வருஷம் 16, அன்புச்சங்கிலி, இதய வாசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார். கடைசியில் இவர் நடித்தப் படம் 2004ல் வெளியான சூப்பர்டா. பின் பட வாய்ப்புகள் வராததால் உடன் இவர் அதிகமாக குடிக்க தொடங்கினார்.

குடிப்பழக்கத்தினால் இவர் சூட்டிங் போகாமலும் வீட்டிலேயே விழுந்து கிடப்பார். இவர் நடிக்க ஆரம்பிச்ச சந்தோஷத்துல தான் முதன்முறையாக குடிக்கவே ஆரம்பித்தாராம்.

சரத்குமார் உதவி

பின்னர் நடிகர் சரத்குமார் அவர்கள் தனது திவான் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். ஆனால், அதற்கு பிறகும் இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை.

Uthayprakash

இதனால் இவருக்கு நிறைய மன கஷ்டமும், பண கஷ்டமும் ஏற்பட்டது பின் கடன் தொல்லைகள் அதிகம் ஆனது. கடன் அதிகமானதால் சென்னையை விட்டு வெளியேறி விட்டார்.

பின் இவர் கிராமத்தில் ஒரு குடிசையில் ஒரு துறவியின் ஆதரவில் வாழ்ந்து வந்தார்.பின் கடன் தொல்லைகள் அதிகம் ஆனது.

கடைசி காலம்

Uthayprakash2

குடித்து குடித்து இவருடைய கல்லீரல் கெட்டுப் போய் விட்டது. பின் ஆஸ்துமா நோயும் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், மருத்துவமனையில் இருந்து கிளம்பி நடிகர் சங்கம் அருகில் உள்ள ரோட்டில் நடிகர் உதய் பிரகாஷ் விழுந்து கிடந்து இறந்தார்

google news
Continue Reading

More in Cinema History

To Top