கலைஞர் விழாவில் கருணாநிதியாக நடிக்க இருப்பது இந்த நடிகரின் மகனா? அச்சு அசல் அப்படியே இருக்கே

stars
Kalaingar 100: இன்று ஒட்டுமொத்த திரையுலகமே சேர்ந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இதன் விழா நடைபெற இருக்கிறது.
கலைஞரின் புகழை பாட இங்கு யாருக்கும் வயது இல்லை. ஆனாலும் அவரை கொண்டாட ஒரு அற்புதமான வாய்ப்பாக இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு அனைத்து திரைப்பிரபலங்களும் இன்று மாலை 4 மணிக்கு ஒன்று கூடுகின்றனர்.
இதையும் படிங்க: ரசிக்க வருவாரா தளபதி? கலைஞர் 100 விழாவில் கருணாநிதியுடன் இருந்து விஜய் செய்ய ஆசைப்பட்டது என்ன தெரியுமா?
அரசியலிலும் சினிமாவிலும் தன் முழு ஆளுமையை காட்டியவர் கலைஞர் கருணாநிதி. பல போராட்டங்களை சந்தித்தவர். 6 வரலாற்றுப் புதினங்கள், 9 கவிதை தொகுப்புகள், 16 சிறுகதை தொகுதிகள், 18 நாடகங்கள், 18 திரைப் பாடல்கள், 24 கதை எழுதிய திரைப்படங்கள், 32 திரைக்கதை எழுதிய திரைப்படங்கள், 57 வசனம் எழுதிய திரைப்படங்கள் என இவர் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.

karuna
இவருக்கான விழாவை ஒரே நாளில் முடித்து விட முடியாது. ஆனாலும் ஒரு நூற்றாண்டு என்பது ஒரு தனி சாம்ராஜ்யம். சினிமாவிற்காக கலைஞரின் அர்ப்பணிப்பு ஆகச்சிறந்தது. இன்று நடக்க இருக்கும் கலை நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து கொண்டு போவது இயக்குனர் விஜய் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: போலீஸுடன் வீட்டுவந்த கணேஷ்!.. அமிர்தா பிரச்னை முடியுமா? முடியாதா? என்னங்கடா!..
இந்த நிலையில் கலைஞரின் சிறு வயது முதல் அவர் இருந்த காலம் வரை அவரை பிரதிபலித்தே பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க போவதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவருடைய இளம் வயது தோற்றத்தில் நடிகர் உதயாவின் மகன் தான் நடிக்க இருக்கிறாராம்.

HAMRESH
அது சம்பந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது அச்சு அசலாக இளம் வயது கலைஞர் தோற்றத்தில்தான் இருக்கிறார்.
இதையும் படிங்க: மீனாவிடம் அலப்பறையை கூட்டிய விஜயா!.. மனோஜின் சேட்டையை கண்டுப்பிடித்த முத்து!