சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா!..அருண்விஜயிடம் தானாகவே நன்றியை கேட்டு வாங்கிய உதய நிதி!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களான ரஜினி,கமல், விஜய்,அஜித் போன்றவர்கள் இருக்கும் பட்சத்தில் அடுத்தபடியாக இவர்கள் இடத்தை பிடிக்க போராடும் நடிகர்கள் ஏராளம். சிவகார்த்திகேயன், கார்த்தி, ஜெயம்ரவி, அருண்விஜய் இப்படி ஏகப்பட்ட நடிகர்கள் இருக்கும் தமிழ் சினிமாவில்
சத்தமே இல்லாமல் சைலண்டாக காய் நகர்த்தி வருகிறார் நடிகரும் அரசியல் பிரமுகருமான உதய நிதி. அரசியலில் முழு வீச்சாக ஈடுபட்ட சமயத்தில் சினிமாவில் இருந்து விலக போவதாக அறிவித்தார். ஆனால் நடிப்பை தொடர்வேன் என்று கைவசம் நிறைய படங்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபகாலமாக இவர் நடிக்கிற படங்கள் சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் அமைந்த படமாக இருக்கின்றது. நேற்று கூட இவரின் நடிப்பில் கழக தலைவன் படத்தின் ஆடியோ லாஞ்ச் வெளியிடப்பட்டது. இந்த விழாவிற்கு பிரபல சினிமா இயக்குனர்கள், நடிகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : பொன்னியின் செல்வன் நந்தினிக்கு பின்னணி குரல் கொடுத்தது இந்த சின்னத்திரை நடிகைதான்?? என்னப்பா சொல்றீங்க!!
இந்த நிலையில் விழாவிற்கு வந்த அருண்விஜயிடம் உதய நிதி ‘அருண் நீங்கள் எனக்கு ஒரு பெரிய நன்றியை சொல்லனும், ஏனென்றால் நீங்கள் நடித்து வெற்றிப் பெற்ற தடம் திரைப்படம் நான் நடிக்க வேண்டியது. என்னிடம் வந்த போது எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் என் பிஆர்ஓ செண்பக மூர்த்தி கதை நல்லா இல்லை சார் வேண்டாம் என தடுத்து விட்டார். இல்லையென்றால் நான் தான் நடித்திருப்பேன்’ என்று கூறி இனிமேல் அந்த மூர்த்தி பேச்சை கேட்க மாட்டேன் என்று மிகவும் கலகலப்பாக பேசினார்.