வடிவேலுவின் இன்னோர் கோர முகம்.. தூக்குபோட்டு செத்தே போன நபர்… வெளியான பகீர் பின்னணி…

Published on: July 29, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு அப்போது செய்த காமெடிகள் இப்பொது வரை ரசிகர்களின் மனதில் மறக்கமுடியாத ஒன்றாக தான் இருக்கிறது.கடந்த சில ஆண்டுகளாக இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அவர் செய்த காமெடிகள் மீம்ஸ்-ஆக பரவி பலரின் சோகங்களை நிக்கி சந்தோசத்தை கொடுத்தது என்றே கூறலாம்.

இதனையடையது, தற்போது நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், மாமன்னன், சந்திரமுகி 2, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என பல படங்களில் நடித்து வருகிறார்.

என்னதான் நடிகர் வடிவேலு தன்னைத்தானே தாழ்த்தி காமெடி செய்து ரசிகர்களை சிரிக்கவைத்தாலும் கூட, அவரை பற்றி நல்ல விஷியங்கள் எந்த அளவிற்கு வருகிறதோ, அதே அளவிற்கு தீய செய்திகளும் வெளியாது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

இதையும் படியுங்களேன்- உங்க கஞ்சத்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா.?! எதிர்பார்த்து ஏமாந்து போன சிவகார்த்திகேயன்.!

அந்த வகையில், வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்த நடிகர் சிங்க முத்து ஒரு நேர்காணலில் வடிவேலு குறித்து பேசியுள்ளார்.

வடிவேலுவை பற்றி உங்களுக்கு தெரியாததை கூறுகிறேன் அவர் ஷூட்டிங் 9 மணி என்றால் 9 மணிக்கு வந்து விடுவார்.ஆனால், ஸ்கிரிப்ட் பேப்பர்களை வாங்கி அதில் தவறுகளை திருத்த என்று கூறி, ஒரு மணி 12 மணி வரை நகர்த்தி விடுவார், பிறகு ஒரு மணி நேரம் நடித்துவிட்டு மதிய பிரேக் சென்று விடுவார்.

இப்படியே செய்து நான்கு நாட்கள் எடுக்க வேண்டிய படத்தை காட்சிகளை 10 நாட்கள் ஆக்கிடுவார் அவருக்கு நாள் சம்பளம். ஆதலால், இவரிடம் யாரும் வேலை பார்க்க முடியாது. இவரிடம் மேனேஜராக இருந்த முருகன், வேலுச்சாமி இருவரும் குறைவான வயது இறந்துவிட்டனர்.

அதில் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர் குடித்து, குடித்து இறந்து விட்டார். இப்படி இரண்டு மேனேஜர்கள் எங்காவது இறந்ததுண்டா..? அது இவரிடம் நடக்கும் அந்த அளவுக்கு டார்ச்சர் செய்வார் “என்று தனது குமுறலை இந்த நேர்காணலில் கூறியிருந்தார் நடிகர் சிங்கமுத்து.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.