வடிவேலு பாலாஜி மகன் செய்த செயலால் வாயடைத்து நின்ற புகழ்! யாருக்கும் கிடைக்காத அந்த கிஃப்ட்

by Rohini |   ( Updated:2024-02-03 13:13:17  )
balaji
X

balaji

Actor Pukazh: சின்னத்திரையில் தன் நகைச்சுவை மூலம் கொடி கட்டி பறந்தவர் நடிகர் புகழ். கலக்கப்போவது யாரு சாம்பியன், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். அதுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து உலகம் அறிய பிரபலமானார்.

அதன் மூலம் கிடைத்த வரவேற்பால்தான் வெள்ளித்திரையும் அவரை வாரி அணைத்துக் கொண்டது. ஒரு சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த புகழை இப்போது ஹீரோவாக பார்க்க இருக்கிறோம். zoo keeper என்ற படத்தில் புகழ்தான் லீடு ரோலில் நடிக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் டைரக்டர் மட்டுமல்ல அவர் பண்ற அதுவும் வேணும்… தலைவர்171ல் நடக்க இருக்கும் கூத்து….

விஜய் டிவி என்றாலே அது புகழ் இல்லாமல் எந்த நிகழ்ச்சியையும் பார்க்க முடியாது. அந்தளவுக்கு ஆக்கிரமித்து வைத்திருந்தார். ஆனால் இத்தனை புகழுக்கும் காரணமாக புகழுக்கு இருந்தது வடிவேல் பாலாஜிதான்.

அவரால்தான் பல பேர் முன்னுக்கு வந்திருக்கின்றனர். சொல்லப்போனால் ரோபோசங்கர், புகழ் இவர்களையெல்லாம் விட அதிகளவு ரசிகர்களை கொண்டவர் வடிவேலு பாலாஜி. ஆனால் சினிமாவில்தான் அவருக்குண்டான் ஸ்கோப் சரி வர அமையவில்லை. இருந்தாலும் அருகில் இருப்பவர்களுக்கு ஒரு தோளாக இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: யூட்யூப் பிரபலத்தினை எல்ஐசி படத்தில் இறக்கிய விக்னேஷ் சிவன்!… வெளியான வைரல் வீடியோ

அப்படித்தான் புகழுக்கும் இருந்திருக்கிறார். பார்க்கிறவர்களிடம் எல்லாம் புகழுக்காக பேசுவாராம் வடிவேலு பாலாஜி. நல்ல காமெடி பண்றான். அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க என்றெல்லாம் புகழுக்காக பேசுவாராம்.

இந்த நிலையில் புகழுக்காக ஒரு ஃபேன்ஸ் மீட் ஒன்றை பிரபல தனியார் சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. அங்கு வடிவேலு பாலாஜியின் மகன் சர்ப்ரைஸாக புகழுக்காக வந்திருந்தார். அவரை பார்த்ததும் புகழுக்கு ஆச்சரியம்.

இதையும் படிங்க: ஓடும் காரில் போகும்போதே பாடல் எழுதிய கண்ணதாசன்… கவியரசர்னு சும்மாவா சொன்னாங்க…?!

வந்தவர் நேராக புகழின் கையில் ஒரு கருப்பு நிற ப்ரேஸ்லெட்டை போட்டார். அந்த ப்ரேஸ்லெட் வடிவேலு பாலாஜி எப்பொழுதும் அணிந்திருந்த ப்ரேஸ்லெட்டாம். அதுமட்டுமில்லாமல் வடிவேலு பாலாஜிக்கு மிகவும் அதிர்ஷ்டமாக அமைந்த பிரேஸ்லெட்டும் கூட.

அதனால் அந்த அதிர்ஷ்டம் புகழ் மாமாவுக்கு வரவேண்டும் என்றே இதை போடுகிறேன் என வடிவேலு பாலாஜியின் மகன் சொன்னதும் புகழ் வாயடைத்து நின்றார்.

Next Story