என் வளர்ச்சி பிடிக்காம வடிவேலு செஞ்ச காரியம்!.. உண்மையை போட்டுடைத்த சிஸ்ஸர் மனோகர்..
தமிழ் சினிமாவில் வடிவேலு நகைச்சுவையில் எப்படி ஒரு இடத்தை அடைந்திருக்கிறார் என அனைவரும் அறிந்த ஒன்று. அவருடைய சொந்த வாழ்க்கையில் எப்படி இருப்பார் என்பதை பார்ப்பதை தவிர்த்து சினிமாவில் என்ன மாதிரியான ஒரு நடிகன் என்பதை அனைவரும் மெய்சிலிர்க்க பாராட்டியிருக்கின்றனர்.
நடிப்பில் அசாத்தியமான நடிகர் என்று பல பேர் சொல்லி கேள்விப் பட்டிருக்கிறோம். நகைச்சுவையை தன் உடல் அசைவுகளாலும் முக பாவனைகளாலும் வழங்கி ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதில் உண்மையிலேயே ஒரு மாமன்னன் தான் வடிவேலு.
நடிகர் ராஜ்கிரண் மூலம் தமிழ் சினிமாவில் ‘என் ராசாவின் மனசிலே ’ என்ற படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார் வடிவேலு. நடித்த முதல் படத்திலேயே கவுண்டமணியையும் செந்திலையும் யாருடா அவன்? என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கு நடிப்பை அந்தப் படத்தில் வழங்கியிருக்கிறார்.
அப்போது அந்தப் படத்தில் புரடக்ஷன் ஹெட்டாக இருந்து பணிபுரிந்தவர் நடிகரான சிஸ்ஸர் மனோகர். அந்தப் படம் மட்டுமில்லாமல் அதற்கு முன்னதாகவே ஏராளமான படங்களுக்கும் பணிபுரிந்திருக்கிறார். கிட்டத்தட்ட வடிவேலுவுக்கு முன்னதாகவே சினிமாவில் பரீட்சையமானவர் தான் சிஸ்ஸர் மனோகர்.
வடிவேலுவின் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வளர அவருடன் சேர்ந்து பல படங்களில் நடிக்க சிஸ்ஸர் மனோகருக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அவரும் சேர்ந்து நடித்திருக்கிறார். இதனிடையில் சிஸ்ஸர் மனோகரின் வளர்ச்சி வடிவேலுவுக்கு ஒரு கட்டத்தில் பிடிக்கவில்லையாம்.
அதன் காரணமாகவே வடிவேலுவின் பல படங்களில் சிஸ்ஸர் மனோகர் வந்தால் நடிக்க விடாமல் வடிவேலு தடுத்து விடுவாராம். ‘பகவதி’ படத்தில் கூட இரண்டு வடிவேலு வருகிற மாதிரி காட்சிகள் இருக்கும். மின்னல் மாதிரி ஒரு வடிவேலு வந்து வந்து போவார். உண்மையிலேயே அந்த மின்னல் வடிவேலுவாக வர இருந்தவரே சிஸ்ஸர் மனோகர் தானாம்.
இதையும் படிங்க :என்னடா பண்ணி வச்சிருக்க- ஆமீர்கான் முன்னிலையில் ரஜினி பட இயக்குனரை திட்டிய பாரதிராஜா?…
வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த சிஸ்ஸர் மனோகர் விஜய் படம் என்பதற்காக அந்தப் படத்தை தவிர்த்து விட்டு பகவதி படத்திற்காக ஓடோடி வந்திருக்கிறார். ஆனால் வடிவேலு உள்ளே ஏதோ ஏதோ சொல்லி சிஸ்ஸர் மனோகரை நடிக்க விடாமல் செய்திருக்கிறார். இதனால் இருவருக்குமே பிரச்சினைகள் வந்ததாம். நடிகர் சீமான் வந்து சமரசம் செய்து சமாதானம் செய்து வைத்தாராம். இந்த செய்தியை சிஸ்ஸர் மனோகர் ஒரு பேட்டியின் போது கூறினார்.