Connect with us
gowutham

Cinema News

கவுதம் மேனனின் புதிய படத்தில் ஹீரோ அவரா?… ஒரே மாமன்னனுக்கே இவ்வளவு அக்கப்போரு!..

தமிழ் சினிமாவில் மின்னலே திரைப்படம் மூலம் இயக்குனரானவர் கவுதம் மேனன். அடுத்து இயக்கிய காக்கா காக்க படம் மூலம் தான் ஒரு ஸ்டைலீஸ்ட் இயக்குனர் என நிரூபித்தார். சூர்யாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அந்த படம் இருந்தது. அதன்பின், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் என சில திரைப்படங்களை இயக்கினார்.

தமிழ் சினிமாவில் ஆங்கில படம் எடுப்பவர் என பலரும் இவரை சொல்வதுண்டு. ஏனெனில், இவரின் படங்களில் ஹீரோக்கள் நுனிநாக்கு இங்கிலீஸ் பேசுவார்கள். இவர் இயக்கிய வேட்டையாடு விளையாடு திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு ரீரிலீஸ் செய்யப்பட்டு வெற்றியும் பெற்றது.

இதையும் படிங்க: அஜித்தின் ‘v’ செண்டிமெண்டுக்கு இவர்தான் காரணமா? விடாமுயற்சி மட்டும் ஏன் டேக் ஆஃப் ஆகல? ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்

சிம்புவை வைத்து கடைசியாக வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி இருந்தார். மாநாடு திரைப்படத்திற்கு பின் அடுத்த சிம்பு படமாக வெளிவந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, கவுதம் மேனனின் அடுத்தபட அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

vadivelu

இந்நிலையில், வடிவேலுவை ஹீரோவாக வைத்து கவுதம் மேனன் ஒரு கதையை உருவாக்கியுள்ளதாகவும், தற்போது இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் ஓடவில்லை.

ஆனால், மாரிசெல்வராஜின் இயக்கத்தில் உதயநிதியின் அப்பாவாக அவர் நடித்து வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஓடியதோடு, வடிவேலு ஒரு சிறந்த நடிகர் என்பதையும் காட்டியது. அதேநேரம், இந்த படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்ட படமாகவும் இருந்தது.

கவுதம் மேனன் ஸ்டைலிஸாக படம் எடுக்கும் இயக்குனர். எனவே, வடிவேலுவுக்கு அவர் என்ன மாதிரியான கதையை உருவாக்கியிருப்பார் என்பது தெரியவில்லை. இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு ஜோடின்னா தலைதெறிக்க ஓடிய நடிகைகள்!.. ராதிகா செய்த மேஜிக்..

google news
Continue Reading

More in Cinema News

To Top