என்னை திட்டுனுவனுக்கெல்லாம் இருக்கு!. ரெடியா இருங்க!.. யாருன்னு காட்டுறேன்!.. வடிவேல் பேட்டி!...

by Rohini |   ( Updated:2023-08-27 03:30:58  )
vadivelu
X

vadivelu

தமிழ் சினிமாவில் ஒரு பெரிய கம்பேக் கொடுத்து தன்னை மீண்டும் நிரூபிக்க வந்திருக்கிறார் வடிவேலு. ஒரு காலத்தில் கவுண்டமணி செந்தில் இவர்களை போல வடிவேலு இல்லாத படங்களை பார்க்கவே முடியாது. அந்தளவுக்கு அனைத்து முன்னனி நடிகர்களின் படங்களிலும் வடிவேலுவின் நகைச்சுவை வரவேற்பை பெற்றது.

மாமன்னன் திரைப்படம் வடிவேலுவின் வாழ்க்கையில் மிக முக்கிய படமாக அமைந்தது. வடிவேலுவின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் சந்திரமுகி 2.

இதையும் படிங்க : என்ன பெரிய நோலன் படம்!.. மாதவன் படம் பார்த்துருக்கீங்களா?.. ஹாலிவுட்டை அலற விட்ட ஏ.ஆர். ரஹ்மான்!..

இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார் வடிவேலு. அப்போது அவரது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை நினைவு கூர்ந்தார். அதாவது நல்லா போய்க் கொண்டிருந்த தன் வாழ்க்கையில் இரண்டு வருடம் பெரிய சதியில் மாட்டிக் கொண்டேன் என்று கூறினார்.

ஆனால் வாய்ப்பு இல்லாமல் இருந்ததோ இரண்டு வருடம் தான். அதன்பிறகு கொரானா வந்து ஒரு இரண்டு வருடம். ஆனால் வெளியில் உள்ளவர்கள் வடிவேலுவின் மார்கெட் அவ்ளோதான் என பேசத் தொடங்கினார்கள். உலகமே வெளியே வரமுடியாமல் இருக்கையில் வடிவேலுவை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன பண்ணுவது’ என கூறினார்.

அதே போல் புலிகேசியில் வடிவேலுவுக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்ததே நான் தான் என்றும் அவர் வளர்ச்சிக்கு நான் தான் காரணம் என்றும் கூறுகிறார்கள். சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். கருணாநிதியை திட்டி செத்தவன் இருக்கான், எம்ஜிஆரை திட்டி செத்தவன் இருக்கான். ஆனால் தன்னை தானே வளர்த்துக் கொள்பவன் தான் தலைவன். அதே போல்தான் நான் என்னையே வளர்த்திருக்கிறேன் என்று கூறினார்.

இதையும் படிங்க : பாடல் வரிகளை கேட்டு கண்ணதாசனின் காலில் விழுந்த விசு!.. நடந்தது இதுதான்!..

இப்போது என் வளர்ச்சியை பார்த்து, யாரெல்லாம் என்னை பற்றி புறம் பேசினார்களோ தற்போது கை நிறைய மாத்திரைகளை போட்டுக் கொள்ள தொடங்குவார்கள் என கூறினார். அதாவது அவரது வளர்ச்சியை பொறுக்காதவர்கள் பிபி ஏறி மாத்திரை போடும் அளவுக்கு அவர்கள் நிலைமை வந்துவிடும் என மறைமுகமாக வடிவேலு கூறினார்.

சந்திரமுகி-2 படத்திற்கு பிறகு மீண்டும் பழைய வடிவேலுவை பார்க்க முடியும் என உறுதிபட கூறினார் நம் வைகைப்புயல்.

Next Story