More
Categories: Cinema News latest news

பழச மறக்காத வைகைப்புயல்.. டி.ராஜேந்தர் பற்றி வடிவேலு என்ன சொல்லியிருக்காரு பாருங்க

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் பிரபலமானவர் வைகைப்புயல் வடிவேலு. ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த வடிவேலு கவுண்டமணி மற்றும் செந்தில் நடித்த படங்களில் ஒரு சைடு ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்தார். அந்த நேரத்தில் கவுண்டமணியிடம் அடி வாங்கி எல்லாம் நடித்திருக்கிறார் வடிவேலு. இன்று நகைச்சுவையில் ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் என்றால் பல போராட்டங்களை கடந்துதான் வடிவேலுவும் வந்திருக்கிறார்.

பொதுவாக ஒருவரின் வளர்ச்சி பாதையை திரும்பி பார்க்கும் போது அவர் ஏராளமான மேடு பள்ளங்களை கடந்துதான் வந்திருக்க முடியும். அந்த வகையில் வடிவேலுவும் விதிவிலக்கல்ல. ஆனால் புகழின் உச்சிக்கு சென்ற பிறகு கடந்து வந்த பாதையை மறக்கவும் கூடாது.

இதையும் படிங்க: முதல்ல என்ன விரட்டி விட்டாங்க!. இப்ப கமலோட முத்தம்!.. நெகிழும் விஜய் சேதுபதி!…

ஆனால் அதுதான் வடிவேலு செய்த தவறு. அதன் காரணமாகத்தான் பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். அவருடன் நடித்த துணை நடிகர்கள் எல்லாருமே வடிவேலுவின் நடவடிக்கைகளை விமர்சித்துதான் வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் வடிவேலு நடித்த முதல் படம் என என் ராசாவின் மனசிலே என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் வடிவேலுவை முதலில் திரையில் காட்டியவர் டி.ராஜேந்தர்தான். என் தங்கை கல்யாணி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் வடிவேலுவை நடிக்க வைத்திருப்பார் டி.ராஜேந்தர்.

இதையும் படிங்க: ரஜினி படத்திற்கு கமல் செய்த உதவி… மறக்க முடியாமல் இயக்குனர் சொன்ன தகவல்

இதை பற்றி வடிவேலு எங்குமே சொன்னதில்லையே என்று பல பேரும் சொல்ல ஒரு பத்திரிக்கையில் வடிவேலு இதைப் பற்றி பகிர்ந்திருக்கிறார் என சித்திரா லட்சுமணன் கூறியிருக்கிறார். அதாவது சினிமாவிற்கு வரவேண்டும் என வடிவேலு என்றைக்குமே முயற்சித்தது இல்லையாம். இப்போது சினிமாவில் என்னென்ன சேட்டைகள் எல்லாம் செய்திருக்கிறாரோ அதை சினிமாவிற்கு வருவதற்கு முன்பே செய்திருக்கிறாராம்.

இந்த சொர்க்க பூமிக்குள் அடியெடுத்து வைப்பேன் என்று அவர் கொஞ்சம் கூட நினைத்தது இல்லையாம். அவருடைய முகத்தை சினிமாவில் காட்டியது என்றால் அது அண்ணன் டி.ராஜேந்தரால்தான். அதன் பிறகு நல்ல ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது ராஜ்கிரண் தான்.அவர் மட்டும் இல்லை என்றால் சினிமாவில் இந்தளவுக்கு வந்திருக்க முடியாது.சினிமாவை பொறுத்தவரைக்கும் இது ஒரு கிரகம்.

இதையும் படிங்க: மியூஸிக்கும் வேணாம்.. நடிப்பும் வேணாம்! விஜய் லாரன்ஸ் வழியில் புதிய பயணத்தோடு ஹிப் பாப் ஆதி

இங்கு சேட்டிலைட் விடுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை.சினிமாவில் இன்று நான் இருக்கிற நிலைமையை பார்க்கும் போது எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. இது உண்மைதானா என அடிக்கடி வடிவேலுவே கிள்ளி பார்த்துப்பாராம். இதை சித்திரா லட்சுமணன் அவருடைய சேனலில் கூறியிருக்கிறார்.

Published by
Rohini

Recent Posts