தெரிந்தே பாதாள குழியில் குதிக்கும் வடிவேலு!.. எல்லாம் மாமன்னன் ஹிட் கொடுத்த நம்பிக்கை!...

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வளம் வந்தவர் நடிகர் வடிவேலு. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலு காலப்போக்கில் தன்னுடைய திறமையாலும் நடிப்பாலும் முகபாவனைகளாலும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து ஒரு முன்னணி நடிகராக காணப்பட்டார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மாமன்னன் திரைப்படத்தில் ஒரு சிறந்த குணசித்திர நடிப்பை வடிவேலு வெளிப்படுத்தி இருந்தார். மக்கள் அனைவரும் வடிவேலுவை இந்த படத்தின் மூலம் வெகுவாக பாராட்டினார்கள்.

இதையும் படிங்க : கூடவே இருந்து ஆப்பு வைத்த மோகன்லால்! ஜெயிலர் படத்திற்கு வந்த சிக்கல் – போராட்டத்தில் படக்குழு

இந்தப் படத்தின் எதிரொலி மீண்டும் வடிவேலுவை ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஹீரோவாக்கி இருக்கிறது. ஐசரி வேல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வடிவேலு ஒரு புதிய படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்.

அந்தப் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்குகிறாராம். வடிவேலு நடிக்க இருக்கும் கதாபாத்திரம் முதல் மரியாதை படத்தில் எப்படி ஒரு கதாபாத்திரத்தை சிவாஜி ஏற்று நடித்தாரோ அதே மாதிரியான கதாபாத்திரத்தில் தான் வடிவேலு நடிக்க இருக்கிறாராம்.

இதையெல்லாம் பார்க்கும் போது இனிமேல் நகைச்சுவை பக்கம் வடிவேலு திரும்ப மாட்டார் என தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் முதல் மரியாதை படத்தில் சிவாஜியின் நடிப்பை இன்றளவும் யாராலும் மறக்கமுடியாது. மேலும் சிவாஜி ஏற்று நடித்த கதாபாத்திரத்தை யாராலும் நடிக்க முடியாது.

இதையும் படிங்க : ஹார்மோனியத்தை இனிமே தொடமாட்டேன்.. ரஜினியிடம் சவால் விட்ட இளையராஜா – அப்புறம் என்னாச்சு தெரியுமா?

இப்போது அதே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இருந்தாலும் வடிவேலு செய்வதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏற்கனவே ஐசரி வேல் இன்டர்நேஷனல் மற்றும் கௌதம் இயக்கத்தில் சிம்புவை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது.

ஆனால் ஐசரி தரப்பிற்கும் சிம்புவிற்கும் இடையே வந்த பிரச்சனை காரணமாக அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஒரு வேளை அந்த படமாக கூட இருக்கலாம் என கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.

 

Related Articles

Next Story