சினிமாவுக்கு வரதுக்கு முன்னாடி நான் செய்த வேலை!. ஓப்பனாக பேசிய வடிவேலு!…

vadivelu
மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து ராஜ்கிரணின் அலுவகத்தில் ஆபிஸ் பாய் வேலை பார்த்தவர்தான் வடிவேலு. அப்போது ராமராஜனை வைத்து என் ராசாவின் மனசிலே என்கிற படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ராமராஜனின் கால்ஷீட் கிடைக்காததால் அவரே ஹீரோவாக நடிப்பது என முடிவானது.
வாய்ப்பு கேட்டு வடிவேலு தொடர்ந்து நச்சரித்துகொண்டே இருந்ததால் அந்த படத்தில் வடிவேலுவை சில காட்சிகளில் நடிக்க வைக்க நினைத்தார். ஆனால், அந்த படத்தில் நடித்த கவுண்டமணிக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆனால், ராஜ்கிரணை சம்மதிக்க வைத்து சில காட்சிகளை வடிவேலுவுக்கு கொடுத்தார்.
அதன்பின் சின்னக் கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் வடிவேலு. தொடந்து கிராமத்து கதைகளை கொண்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார். தனி டிராக் காமெடி பண்ணி வந்தவர் ஒரு கட்டத்தில் ஹீரோக்களுடன் படம் முழுக்க கூட வரும் நடிகராக மாறினார்.

வடிவேலுவுக்கு ஒரு பழக்கம் உண்டு. தான் மேலே வர ராஜ்கிரண், ஆர்.வி.உதயகுமார், விஜயகாந்த் போன்றவர்கள் காரணமாக இருந்தாலும் அவர்களுக்கு எந்த பேட்டிகளிலும், ஊடகங்களிலும் நன்றி சொல்லமாட்டார். அதேபோல், சரியான வாய்ப்பில்லாமல் தவிக்கும் எந்த சிறிய காமெடி நடிகர்களையும் மேலே தூக்கிவிடமாட்டார்.
இன்னும் சொல்லப்போனால் தன்னுடன் நடிக்கும் சின்ன சின்ன காமெடி நடிகர்களை மிகவும் அசிங்கமாகவும் நடத்துவார். வடிவேலுக்கு நல்ல எண்ணமோ, நன்றி உணர்ச்சியோ, மற்றவர்களுக்கு உதவும் குணமோ என எதுவுமே கிடையாது என அவருடன் நடித்தவர்கள் பலரும் சொல்லி இருக்கிறார்கள்.
தற்போது வடிவேல் ஏறக்குறைய ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். இந்த நிலையில்தான் சுந்தர்.சியுடன் கேங்கர்ஸ் படத்தில் நடித்திருக்கிறார். இது தொடர்பான பரமோஷனுக்காக ஊடகம் ஒன்றில் பேசிய வடிவேலு ‘ சினிமாவுக்கு முன்னாடி கண்ணாடிகளை கட் பண்ணும் வேலை செய்தேன். ஷோகேஷ் கண்ணாடி, கார் கண்னாடி, பஸ் கண்னாடி எல்லாம் கட் பண்ணும் வேலை. அந்த வேலைக்குதான் எங்க ஐயா கூட்டிட்டு போவார். நான், என் ரெண்டு தம்பிகளும் அந்த வேலை செய்வோம். எங்க அப்பாவுக்கு உதவியா நாங்க போவோம்’ என பேசியிருக்கிறார்.