இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள அலப்பறையா? பிக்பாஸ் செல்வதால் சீன் போடும் இளம் நடிகர்....
பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறது. இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக உள்ளது. மக்களை என்டர்டெயின் செய்யும் விதமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள்.
அந்த வரிசையில் விஜய் டிவியில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். ஹிந்தியில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது. நான்கு சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்றதோடு போட்டியாளர்களும் பிரபலமாகினார்கள். மேலும் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான பணிகள் மற்றும் செட் அமைக்கும் பணிகள் என விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதை இளம் நடிகர்கள் தங்களுக்கு கிடைக்கும் விளம்யரமாகவே கருதுகிறார்கள். இந்நிகழ்ச்சி மூலம் தினமும் மக்கள் தங்களை டிவியில் பார்ப்பதால் எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடலாம் என்றும், அவ்வளவு எளிதில் மக்கள் தங்களை மறக்க மாட்டார்கள் எனவும் நினைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களில் ஒருவராக இளம் நடிகர் வருண் செல்ல உள்ளாராம். இந்நிலையில் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதை கொண்டாடும் விதமாக நட்சத்திர ஹோட்டலில் அவரது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து கொண்டாடியுள்ளாராம் வருண். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் இன்னும் வீட்டுக்குள்ளயே போகல அதுக்குள்ள இம்புட்டு அலப்பறையா என கலாய்த்து வருகின்றனர்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms