என்னோட ஆரோக்கியமான உடம்புக்கு அவங்க ரெண்டு பேரும்தான் காரணம்!... ரகசியம் சொல்லும் வேல ராமமூர்த்தி!

by sankaran v |
Vela Ramamoorthi
X

Vela Ramamoorthi

தமிழ் திரையுலகில் கிடாரி படத்தில் அரிவாளும், கத்தியுமாக வந்து கதாநாயகனைக் கதிகலங்க வைக்கும் வில்லன் யார் என்றால் அது வேல ராமமூர்த்தி தான். இவர் பற்றி நாம் அறியாத சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.

இவர் நடிகர் மட்டுமல்ல. பிரபல எழுத்தாளரும் கூட. இவர் விவசாயத்திலும் கைதேர்ந்தவர். ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி இவரது சொந்த ஊர். ராணுவத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர் போஸ்ட் ஆபீஸிலும் வேலை பார்த்துள்ளார். 2008ல் சுந்தர்.சி.யின் இயக்கத்தில் வெளியான ஆயுதம் செய்வோம் படத்தில் அறிமுகமானார்.

2013ல் இவருக்கு வெளியான மதயானைக் கூட்டம் படம் தான் ரசிகர்கள் மத்தியில் இவரைக் கொண்டு போய்ச் சேர்த்தது. கிடாரி, கொம்பன், அப்பா, ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை, துப்பாக்கி முனை, புலிக்குத்தி பாண்டி என வரிசையாக இவர் நடித்த படங்கள் அனைத்திலும் பிரமாதமான நடிப்பு. அவ்ளோ யதார்த்தம். ஆஜானுபாகுவான உடல் தோற்றத்துடன் கம்பீரமான குரலில் இவர் பேசும்போது அழும் குழந்தையும் வாயைப் பொத்திக்கொள்ளும்.

உடலில் நோயே வராமல் இருக்க என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்டால் இப்படி சொல்கிறார். விதை இல்லாத பழங்கள், காய்கறிகளையும் எண்ணையில் பொரித்த பாரம்பரியம் இல்லாத எந்த உணவையும் நான் சாப்பிடுவதில்லை.

இயற்கை உணவுகளை மட்டும் தான் சாப்பிடுகிறேன். சர்க்கரை நோய், பிரஷர்னு எந்தப் பிரச்சனையும் எனக்கு இல்லை. அவரவர் உடம்புக்கு அவர் அவர் தான் வைத்தியன், விஞ்ஞானி. டாக்டரை விட நமக்குத் தான் நம்ம உடம்பப் பத்தி தெரியும். நமக்கு எந்த உணவு சரிவராதுன்னு தெரிஞ்சி சாப்பிட்டாலே போதும். எந்தப் பிரச்சனையும் வராது.

Kidari

என் அம்மா மாதிரியே என் மனைவியும் எனக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளா சமைச்சிப் போடுறாங்க. அது எனக்குக் கிடைச்ச பரிசு. என் ஆரோக்கியமான உடம்புக்கு அவங்க ரெண்டு பேரும் தான் முக்கியக் காரணம். அதோடு இலக்கியமும், எழுத்தும் என்கூட இருக்கிறதால மனசும் ரொம்ப இளமையாவும், உற்சாகமாகவும் இருக்கு என்கிறார்.

Next Story