உனக்கு என்ன வரணுமோ அவ்ளோ தான் அவன் கொடுப்பான்....! வெங்கடேஷ் பேசும் ஆன்மிகத்தைக் கேளுங்க...அசந்துருவீங்க..!
80களில் துடிப்பான ஹீரோ. இளமை துள்ளலுடன் இவரது படங்கள் ஆக்ஷன் கலந்த காமெடி படங்களாக இருக்கும். இவரது தாய்மொழி தெலுங்கு. ஆனால் தமிழ் அழகாகப் பேசுவார். படித்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை தான்.
இவரது 25வது படம் அனாரி. இது இந்தி படம். இந்தப் படத்தில் தான் வெங்கடேஷ் இந்தியில் அறிமுகமானார். அனாரி தமிழில் பிரபு நடித்த சின்னத்தம்பி படத்தின் ரீமேக். தனது சென்னை கால அனுபவங்களைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்.
நான் படிச்ச உடனே பிசினஸ் பண்ணலாம்னு நெனைச்சேன். முடியல. அது சரியா வரல. இனிஷியல் ஸ்டேஜஸ்ல இருந்தது. இம்போர்ட், எக்ஸ்போர்ட்லாம் பண்ணலாம்னு இருந்தேன்.
பாரின் டிராவல் எல்லாம் பிடிக்கும். அந்த டைம்ல அப்பா (தெலுங்கு பட தயாரிப்பாளர் ராமநாயுடு) பிசியா இருந்தாங்க. பெரிய ஸ்டார் ஒருத்தர் பிசியா இருந்தாங்க. அப்போ நீ பண்றியான்னு கேட்டாரு அப்பா. ஏ இவன் இருக்கான். இவனை வச்சி பண்ணலாம்னு சொல்லிட்டாங்க. கலியுக பண்டாவுலு என்ற படம் தான் அது. எனக்கு ட்ரெயினிங் இல்ல...ஒண்ணும் இல்ல.
தெலுங்கு கூட சரியா பேச வராது. ஒண்ணுமே தெரியாது. ஏதோ பண்ணலாம்னு...டக் டக்னு பண்ணாங்க. குஷ்பூவக் கூப்பிட்டு ஏதோ எடுத்துட்டு...இருந்தாங்க. அப்பவும் டவுட் இவன் சரியா வருவானான்னு. நெகடிவ் டைப்பா கொடுத்துடலாமான்னு பார்த்தாங்க.
எனக்கு அது தெரியாது. ஆனால் அது லக்கியா சூப்பர் டூப்பர் ஹிட்டாயிடுச்சு. 1986ல வந்தது. அதுக்கு அப்புறம் 4 படம் பிளாப். அப்போ எல்லாரும் சொன்னாங்க. புரொடியுசர் பையன் இங்கல்லாம் முடியாது. எம்பிஏல்லாம் முடிச்சிட்டு இங்க எதுக்கு?
கொஞ்ச நாள்ல பிக் அப் ஆயிட்டேன். அப்புறம் ரொம்ப சின்சியரா பண்றேன். அதெப்படி பண்றேன்...னா அது நான் இல்ல. நேச்சர்ல இருந்து எனர்ஜி கிடைக்குது. அதை வச்சி நான் பண்றேன். அப்புறம் அது தெய்வீக பயணமானது. கடைசில திருவண்ணாமலை போனேன். ஒரு தெளிவு கிடைச்சுது.
சென்னை டான்போஸ்கோல படிச்சப்ப நான் ஒரு ஆவரேஜ் ஸ்டூடண்ட். ஒரு சின்ன கேங்கோட இருப்பேன். எப்பவுமே லாஸ்ட் பென்ச் தான். படிப்புல இருந்ததை விட விளையாட்டுல ஆர்வம் அதிகம்.எல்லாத்துலயும் நான் தான் கேப்டன். லயோலா படிக்கும்போது காலேஜ்க்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசனை வரும்.
அப்போ சினிமா ஆசை எல்லாம் கிடையாது. ஆனா முதல்ல கேட்டது பாரதிராஜா சார் தான். அப்போ எனக்கு செட்டாகல. லயோலா காலேஜ் சாப்ட். அப்போ பச்சையப்பா தான் வேற லெவல்ல இருக்கும்.
அப்போ ரெண்டு பேருக்கும் பயங்கர சண்டை வரும். அப்படி ஒரு சமயம் நாங்களும் அவங்களும் போகும்போது பிரின்சிபல் வந்து சண்டையை நிறுத்திட்டாங்க.
கேசினோல இங்கிலீஷ் படம் பார்ப்போம். தமிழ்படத்திற்கு சாந்தி தியேட்டர்லாம் வருவோம். சைனீஷ் ரெஸ்டாரெண்ட்லாம் போவோம்.
முதல் படத்துலயே விக்டரி வெங்கடேஷ் ஆக்கிட்டாங்க. ரசிகர்கள் வட்டம் அதிகமாயிடுச்சு. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. ஸ்கூல், காலேஜ்ல இருந்தே காஸ்டியும்ல இன்ட்ரஸ்ட். அப்பவே எல்லாரும் எப்படிடா இவன் போடுறான்...யாரும் போடாத ட்ரஸ்சன்னு ஆச்சரியப்படுவாங்க.
அப்பவே காதுல ரிங், பங்க்னு ஸ்டைலாக இருப்பேன். எல்லாருக்கும் அது புதுசா தெரியும். என்னடா இவன்னு சொல்வாங்க. ரஜினி சார்கிட்ட ஆன்மிகம் சம்பந்தமா பேசிருக்கேன். கடைசியில நான் யார்னு தேட ஆரம்பிச்சேன். ரமண மகரிஷி தான் சொல்லிருக்காரு.
உனக்கு என்ன வரணுமோ அவ்ளோ தான் அவன் கொடுப்பான்.
வெற்றிமாறன் திரைக்கதையில், ஸ்ரீகாந்த் அதாலா இயக்கத்தில் 2021ல் நாரப்பா வெளியானது. வெங்கடேஷ், பிரியாமணி, கார்த்திக் ரத்னம் உள்பட பலர் நடித்துள்ளனர். இது தனுஷ் நடித்த அசுரன் படத்தின் ரீமேக். கலைப்புலி எஸ். தாணு, சுரேஷ் பாபு தயாரித்துள்ளனர். படத்தில் வெங்கடேஷ் நாரப்பாவாக நடித்து அசத்தியுள்ளார்.
இந்த ஆண்டில் கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற இந்திப்படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.