ஜெயலலிதாவை அன்றே கணித்த வெண்ணிற ஆடை மூர்த்தி.. அட அப்படியே நடந்துடுச்சே!..

jayalalitha
தமிழ் சினிமாவில் ஒரு புதுமை பெண்ணாக வந்தவர் நடிகை ஜெயலலிதா. இவரின் வருகை பிரபலங்கள் மத்தியில் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அந்தக் கால பெண்களின் நடைமுறை வாழ்க்கையில் சில பல மாற்றங்களோடு வந்தவர் தான் ஜெயலலிதா.

venniradai moorthy
முக்காடு போர்த்தி நடிக்கும் நடிகைகளின் மத்தியில் ஸ்லீவ்லெஸ் ஆடை, குட்டைப் பாவாடை என நாகரீக பெண்ணாக வந்தார். மேலும் ஆங்கிலமும் சரளமாக பேசக்கூடிய நடிகையாக திகழ்ந்தார். அதுமட்டுமில்லாமல் எம்ஜிஆர் முன்னாடி அவ்ளோ சீக்கிரம் யாரும் உட்கார்ந்து பேச முடியாத சூழ்நிலையை மாற்றினார்.
அவர் முன்னாடி கால் மேல் கால் போட்டு அமர்ந்து புத்தகங்களை படிப்பதில் ஆர்வமுடையவராக இருந்திருக்கிறார். இவர் அறிமுகமான ‘வெண்ணிறாடை’ படம் இவருக்கு ஆரம்பத்திலேயே புகழைப் பெற்று தந்தது. இதே படத்தில் ஜெயலலிதாவுடன் நிர்மலா மற்றும் மூர்த்தி என இருபெரும் பிரபலங்களும் நடித்து புகழ் பெற்றனர்.
இந்த நிலையில் வெண்ணிறாடை மூர்த்தி ஜெயலலிதாவை பற்றி சில தகவல்களை பகிர்ந்தார். அதாவது படப்பிடிப்பில் ஜெயலலிதா அவர் காட்சிகளை முடித்து விட்டு செட்டில் தான் உட்கார்ந்திருப்பாராம். மற்ற ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் வெளியே வந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்களாம் . ஆனால் ஜெயலலிதா யாரிடமும் பேசாமல் புத்தகங்களை மட்டும் வாசித்துக் கொண்டிருப்பாராம்.

moorthy
ஒரு நாள் எம்ஜிஆர் படப்பிடிப்பில் ஜெயலலிதா இருக்கும் போது எதிரே ஒரு படப்பிடிப்பில் வெண்ணிறாடை மூர்த்தி வேறொரு படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். அவரை அழைத்து ‘எம்ஜிஆரை பார்த்திருக்கிறீயா?’ என்று கேட்டு மூர்த்தியை எம்ஜிஆருக்கு அறிமுகம் செய்து வைத்தாராம் ஜெயலலிதா.
மூர்த்தி அந்த சமயத்தில் ஹவுசிங் போர்டு ஒரு வீட்டில் தான் இருந்தாராம். திடீரென ஜெயலலிதா போன் செய்து ‘வீட்டிற்கு வரட்டுமா?’ என்று கேட்டாராம். ஆனால் மூர்த்தி ‘ஐய்யோ நீங்கள் வரவேண்டாம், வந்தால் மக்கள் கூட்டம் அலைமோதும்’ என்று கூறிவிட்டு என்ன விஷயம் என கேட்டிருக்கிறார். உடனே ஜெயலலிதா ‘ நீங்கள் ஜாதகம் பார்ப்பீர்களாமே? என் ஜாதகத்தை கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்.

jaya3
போனிலேயே எல்லா தகவல்களும் பரிமாறப்பட்டு அதன் பின் ஜெயலலிதாவின் ஜாதகத்தை கணித்து சொல்லியிருக்கிறார் மூர்த்தி. ‘உங்களுக்கு சினிமாவில் கொஞ்ச நாள் தான் ஆதிக்கம் இருக்கும், அதன் பின் தயாரிப்பு, டெலிவிஷன் என போய்விடுவீர்கள், அதுவும் இல்லையெனில் நேராக அரசியலில் காலடி வைத்து அமைச்சராகும் வாய்ப்பு இருக்கிறது’ என்று சொன்னாராம். அதை கேட்ட ஜெயலலிதா ‘எனக்கு அரசியல் பற்றி எதுவுமே தெரியாதே’ என்று சொல்ல அதற்கு மூர்த்தி அதனால் தான் அரசியலுக்குள் சாதிப்பீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அதனை அடுத்து அவர் அரசியலில் ஆதிக்கம் செலுத்தியவுடன் ஒரு நாள் மூர்த்தியை பார்க்க நேர்ந்திருக்கிறது ஜெயலலிதாவிற்கு. அப்போது அருகில் இருந்து சசிகலாவிடம் மூர்த்தியை காட்டி ‘இவர் தான் ஒரு நாள் நான் அரசியலில் அமைச்சராவேன் என்று சொன்னார். ஆனால் நான் முதலமைச்சராகவே ஆகிவிட்டேன்’ என்று கூறினாராம்.இந்த சுவாரஸ்ய தகவலை வெண்ணிறாடை மூர்த்தி ஒரு பேட்டியில் கூறினார்.