ஒருநாள் அது நடக்கும்!. சிவாஜிக்கு ஜோசியம் சொன்ன நடிகர்.. அட அப்படியே நடந்துடுச்சே!....
தமிழ் சினிமாவில் ஒரு உயரிய ஆளுமையாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நாடக மேடைகளில் தனது தனித்திறமையை வளர்த்தவர் அடுத்ததாக சினிமாவில் காலூன்ற வழிவகுத்தது. பராசக்தியில் அவரது ஆர்ப்பறிக்கும் வசனம் இன்றளவும் சினிமாவில் வாய்ப்புத் தேடி வருவோருக்கு ஒரு உந்துதலாகவே அமைந்திருக்கிறது.
எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள் இவரின் நடிப்பின் மூலமாகவே பல சரித்திர நாயகர்களை நாம் கண்டு கழித்திருக்கிறோம். இவரது அயராது உழைப்பின் காரணமாகவே இத்தனை வளர்ச்சியை அவர் அடைய முடிந்தது. நடிப்பின் மீது இவர் காட்டிய ஆர்வம் இறக்கும் தருவாய் வரைக்கும் உணர முடிந்தது.
இந்த நிலையில் சிவாஜியுடன் தனக்கு இருந்த நெருக்கத்தை பிரபல நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி ஒரு பேட்டியின் போது தெரிவித்திருந்தார். வெண்ணிறாடை மூர்த்திக்கு இயல்பாகவே ஜோசியம் பார்க்கும் திறன் வாய்க்கப் பெற்றவர்.
இதனை அறிந்த சிவாஜி வெண்ணிறாடை மூர்த்தியிடம் ‘ நீ ஏதோ ஜோசியம் பார்ப்பீயாமே? எனக்கு கொஞ்சம் பார்த்துச் சொல்’ என்று கூறியிருக்கிறார். உடனே மூர்த்தி ‘ஜாதகம் இருந்தால் தானே பார்க்க முடியும்?’ என்று கூற உடனே மறு நாள் எடுத்து வரச்சொல்லி பார்க்க சொல்லியிருக்கிறார். ஜாதகத்தை பார்த்த மூர்த்தி சிவாஜியிடம் ‘உங்களுக்கு அரசு சம்பந்தமான வேலைகளில் நுழைய வாய்ப்பிருக்கிறது’என்று கூறியிருக்கிறார்.
அதற்கு சிவாஜி ‘என்னது நானா அரசு வேலையில் ?’என்று சொல்ல ‘ஆமாம், உங்க ஜாதகம் அப்படி தான் சொல்லுது, ஆனால் ஒரு விதத்தில் அரசு சம்பந்தமான வேலையில் இருப்பீர்கள்’ என்று ஒரு ஆண்டு பிப்ரவரியில் சொல்லியிருக்கிறார். அதே பிப்ரவரியில் ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சிவாஜி.
இதனால் அவரை பார்க்க நிறைய பேர் அவர் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். ஒரு படப்பிடிப்பில் சிவாஜியும் வெண்ணிறாடை மூர்த்தியும் சந்தித்த போது மூர்த்தியிடம் சிவாஜி ‘ஏன் என்ன வந்து பாக்கல? எல்லாரும் வந்து பார்த்தார்கள்’என்று சொல்ல அதற்கு மூர்த்தி ‘சொல்லப் போனால் நீங்க தான் என்ன வந்து பார்த்திருக்கனும், ஜோசியம் சொன்னவன் நான்’ என்று சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தாராம் சிவாஜி.