அமெரிக்க பிரசிடெண்டுக்கே ஜோசியம் சொன்ன தமிழ் நடிகர்!.. ஆனா நடந்தது தான் பயங்கரம்..
தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான முக பாவனையாலும் சிரிக்க வைக்கும் நகைச்சுவையாலும் அனைவரையும் மகிழ்வித்தவர் நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி. ஸ்ரீதரின் அறிமுகம் என்பதால் அவரை இன்று வரை ஒரு கடவுளாகவே கொண்டாடி வருகிறார்.
ஸ்ரீதரின் ‘வெண்ணிறாடை’ படத்தின் மூலம் தான் முதன் முதலில் வெண்ணிறாடை மூர்த்தி அறிமுகமானார். அவரோடு ஜெயலலிதா, நிர்மலா ஆகியோரும் அந்த படத்தின் மூலம் அறிமுகமானார்கள். தான் அறிமுகமானதில் இருந்து இன்று வரை தனக்கு ஏற்பட்ட சினிமா அனுபவங்களை சித்ரா லட்சுமணனுடன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் வெண்ணிறாடை மூர்த்தி.
நடிப்பையும் தாண்டி ஜோசியத்திலும் ஆர்வம் அதிகம் கொண்டவராக இருந்திருக்கிறார். ஜெயலலிதா, சிவாஜி, ரஜினி என பெரிய ஆளுமைகளுக்கெல்லாம் தன்னுடய ஜோசியத்தால் உண்மையை அப்பவே கூறியவர் வெண்ணிறாடை மூர்த்தி.
அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதா அரசியலில் உச்சத்தில் ஜொலிப்பார் என்றும் சிவாஜிக்கு அரசு சம்பந்தமான ஏதோ ஒரு அந்தஸ்து கிடைக்கும் என்றும் ரஜினி வருங்காலத்தில் சூப்பர் ஸ்டாராக திகழ்வார் என்றும் உண்மையை புட்டு புட்டு வைத்திருக்கிறார் வெண்ணிறாடை மூர்த்தி.
அவர் சொன்னதை போலவே இவர்களும் அவர்கள் துறையில் சாதித்தனர். அதோடு இல்லாமல் வெண்ணிறாடை மூர்த்தியிடமே நீங்கள் சொன்னது நடந்து விட்டது என்று கூறி தங்களின் மகிழ்ச்சியையும் தெரிவித்திருக்கின்றனர். அதே போல ஒரு சமயம் அமெரிக்க ஜனாதிபதியாக ஜார்ஜ் புஷ் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அப்போதும் வெண்ணிறாடை மூர்த்தி புஷ் தான் ஜெயிப்பார் என்று சொல்லியிருக்கிறார்,
அப்போது வெண்ணிறாடை மூர்த்தியின் மகன் இதை செய்தித் தாள்களில் அச்சிட்டு வெளியிடுவோம் என்று சொல்ல வெண்ணிறாடை மூர்த்தியோ ‘போடா ஜெயிக்கலைனா என்ன வந்து ஜெயிலுக்குள் தூக்கி போட்டுருவான், இதே இந்தியானா எதாவது சொல்லி வெளியே வந்துடலாம், அமெரிக்கால சிக்கினா என் நிலைமை என்ன ஆகும்’ என்று சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க : அழைக்காத திருமணத்தில் அதிர்ச்சி கொடுத்த ஜெய்சங்கர்!.. யாருடைய திருமணம் தெரியுமா?..
மேலும் ரஜினியின் ஜாதகத்தை எழுதியதே வெண்ணிறாடை மூர்த்தி தானாம். இதை அந்தப் பேட்டியில் ரஜினி இப்போது கையில் வைத்திருக்கும் ஜாதகம் நான் எழுதியது தான் என்று கூறினார்.