ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லதான் டிஃபன் வேணும்!.. பிளாப் கொடுத்தும் அடங்காத நடிகர்…

Published on: February 15, 2024
vetri
---Advertisement---

Actor Vetri: தமிழ் சினிமாவில் ஒரு வளரும் இளம் நடிகராக இருப்பவர் நடிகர் வெற்றி. 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமான வெற்றி இந்தப் படத்தை சொந்த தயாரிப்பில் தயாரித்து வெளியிட்டார்.

இந்தப் படத்திற்கு பிறகு ஜீவி என்ற க்ரைம் திரில்லர் படத்தில் லீடு ரோலில் நடித்தார் வெற்றி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பாஸிட்டிவான ரெஸ்பான்ஸை பெற்றது. அதுமட்டுமில்லாமல் அந்த வருடத்தில் சிறந்த க்ரைம் திரில்லர் படம் என்ற பெயரையும் ஜீவி படம் பெற்றது.

இதையும் படிங்க: டைட்டிலை தவிர ஒன்னும் வரல.. ஆனால் அடுத்த படத்திற்கான ஹீரோயினை தட்டி தூக்கிட்டாரே அஜித்

இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றி பம்பர், வனம், ஜோதி, ஜீவி 2 போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ஜீவி படத்தை தவிற வேறெந்த படமும் வெற்றிக்கு வெற்றி வாய்ப்பாக அமையவில்லை. இப்போதுகூட ஆலன் என்ற படத்தில் நடித்து வருகிறாராம் வெற்றி.

இந்தப் படத்திற்காக பெரிய தாடி மீசை எல்லாம் வைத்து பார்க்கவே அடையாளம் தெரியாத வகையில் மாறியிருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடந்து வரும் நிலையில் அங்கு சில தர்ம சங்கடமான சம்பவங்களும் நடந்திருக்கிறது.

இதையும் படிங்க: விஜய் 69-ஐ இயக்கப்போவது அந்த இயக்குனரா?! என்னப்பா டிவிஸ்ட்டுக்கு மேல டிவிஸ்ட்டா இருக்கு!.

வெற்றி ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில்தான் சாப்பாடு வேண்டும் என்று கூற வாரணாசியில் சொல்லிக் கொள்ளும் படியான ஸ்டார் ஹோட்டல்கள் இல்லையாம். அதனால் அருகில் இருக்கும் ஹோட்டலில் இருந்து டிஃபன் வரவழைக்கப்பட்டிருக்கிறது.

அதை வாங்கிக் கொண்டுவர உடனே வெற்றி ‘ நான் தினமும் காலையில் இட்லி மற்றும் வடைதான் சாப்பிடுவேன். அதுதான் வேண்டும்’ என சொல்லியிருக்கிறார். இதை முன்பே சொல்லியிருந்தால் ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆனால் வாரணாசியில் அந்த ஏரியாவுக்கு ஏற்ற சாப்பாடுகள்தான் கிடைக்கும் என்பதால் இட்லி, வடைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இதையும் படிங்க: காதலியை ஆட்டையை போட பார்த்த சரத்குமார்!.. நாட்டாமையை கடுப்பேத்த அஜித் செஞ்ச காரியம்…

இருந்தாலும் எங்கேயோ இருந்து இட்லி வடை வரும் வரைக்கும் காத்திருந்து வெற்றி சாப்பிட்ட பிறகே படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். ஒரு இட்லி வடைக்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் படப்பிடிப்பை நிறுத்த வேண்டியதாகி விட்டதாம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.