Ajith: சுவிட்சர்லாந்து போனதில்லன்னு சொன்னேன்! உடனே அஜித் அப்படி பண்ணுவாருன்னு நினைக்கல

Published on: December 7, 2025
ajith (3)
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். சினிமா உலகில் இவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் என யாரும் இல்லை என்றாலும் அஜித்தின் குணங்கள், நடவடிக்கைகள் என அவருடன் நடித்த பிரபலங்களுக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும். அஜித்துடன் நடித்த அத்தனை பேரும் அஜித்தை பற்றி பெருமையாக பேசித்தான் நாம் பார்த்திருக்கிறோம்.

தற்போது அஜித் மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவருடைய அணிக்கு 7வது இடம் கிடைத்திருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. ரேஸை முடித்ததும் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்குவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அஜித்தை பற்றி நடிகர் விதார்த் ஒரு தகவலை கூறியிருக்கிறார்.  நடிகர் அஜித்துடன் வீரம் திரைப்படத்தில் சேர்ந்து நடித்தார் விதார்த். அந்தப் படத்தில் அஜித்துக்கு தம்பியாக விதார்த்  நடித்திருப்பார். அந்தப் படத்தில் நடிக்கும் போது என்னை தம்பியாகவே அஜித் பார்த்துக் கொண்டார் என விதார்த் ஒரு  பேட்டியில் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சி சுவிட்சர்லாந்தில் படமாக்கினார்களாம்.

அப்போது அஜித் உட்பட அனைவரும் சுவிட்சர்லாந்த் கிளம்ப விதார்த்திடம் நீங்கள் சுவிட்சர்லாந்த் போயிருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார் அஜித். விதார்த் இல்லைனு சொன்னதும் உடனே விதார்த்துக்காக விசா ஏற்பாடு செய்து அவரையும் தன்னுடனேயே சுவிட்சர்லாந்த் அழைத்து சென்றாராம் அஜித். இதை ஒரு பேட்டியில் விதார்த் கூறியிருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த படம் வீரம்.

அது அஜித் கெரியரில் ஒரு டர்னிங் பாயிண்டை ஏற்படுத்திய படமாக அமைந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வீரம் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். விதார்த் அஜித்துக்கு தம்பியாக நடித்ததை பெருமையாக கருதுகிறேன் என கூறியிருந்தார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.