25 பட வாய்ப்பும் போச்சு! என்கிட்ட அவங்க எதிர்பாக்குறதே வேற.. மைனா பட ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலையா?

Actor Vidharth: நடிப்பு பட்டறையில் இருந்து வந்தவர்தான் நடிகர் விதார்த். இவருடன் விமல், விஜய் சேதுபதி என இவர்களும் ஒன்றாக பயணித்தவர்கள். விதார்த்திற்கு வந்த ஒரு பட வாய்ப்பை விஜய் சேதுபதி பண்ணால் நன்றாக இருக்கும் என அவரே விட்டுக் கொடுத்திருக்கிறார்.

இப்படி தனக்கு செட் ஆகவில்லை என்றாலும் இவர்களுக்கு சரியாக இருக்கும் என பெருந்தன்மையுடன் பரிந்துரை செய்யக் கூடிய நடிகர் விதார்த். மைனா படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை ருசித்த படமாக விதார்த்துக்கு அமைந்தது. கிராமத்து மண்வாசனை பொருந்திய நடிகராக இருந்தாலும் இவர் நடிப்பு பாராட்டும் படியாகவே எல்லா படங்களிலும் அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க: சாரி டேடி.. ராஜ்கிரண் மகளுக்கு நேர்ந்த சோகம்! திருமண வாழ்க்கையில் நடந்த அசம்பாவிதம்

எதார்த்தமான பேச்சு, அலட்டிக்காத நடிப்பு என இவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் தன் கெரியரில் 25 படங்களை தவறவிட்டிருக்கிறேன் என விதார்த் கூறியிருக்கிறார்.

மைனா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை செய்த படம். ஆனால் அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு பெரிதாக எந்தப் படமும் அவருக்கு வசூலை அள்ளித்தரவில்லை. ஆனால் மைனாவிற்கு பிறகு குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை போன்ற பல படங்கள் விமர்சன ரீதியாக மக்களால் அங்கீகரிக்கப்பட்ட படங்களாக அமைந்தன.

இதையும் படிங்க: எதிர்ப்பை மீறி உன்ன நடிக்க வைக்கிறேன்.. நிரூபிச்சி காட்டு!.. கமலுக்கு டெஸ்ட் வைத்த பாலச்சந்தர்..

ஆனால் வருமானம் வந்ததா என்றால் இல்லை. அவர் நடித்த படங்களில் நல்ல கதை இருக்கும். ஆனால் வசூலில் குறைந்த அளவே கலெக்‌ஷன் இருக்கும். இதை குறிப்பிட்டு பேசிய விதார்த் என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு லாபம் இருக்க வேண்டும். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் தயாரிப்பாளர்களும் லாபம் அடைய வேண்டும்.

இப்படி 25 படங்களை நான் தவறவிட்டிருக்கிறேன். காரணம் அந்த 25 படங்களுக்கும் எந்த தயாரிப்பாளர்களும் படம் எடுக்க முன்வரவில்லை. காரணம் நான் வசூல் ஹீரோ இல்லை என்பதுதான் என விதார்த் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: பவதாரிணி இறப்புக்கு இதனால் தான் சித்தப்பா கங்கை அமரன் வரலை… விஷயத்தை கசியவிட்ட பயில்வான்…

Rohini
Rohini  
Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it