அசினுடன் ஷூட்டிங்!.. கேரவானுக்கு பின்னாடி விஜய் செஞ்ச காரியம்!.. அதிர்ந்து போன படக்குழு!..

அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சினிமாவில் நடிக்க துவங்கி இப்போது பெரிய ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். 30 வருடங்களாக சினிமாவில் நடித்து தனக்கென முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். இவரை வைத்து படமெடுக்க பல இயக்குனர்களும் ஆசைப்படுகிறார்கள். ஒருபக்கம், இவரின் கால்ஷீட்டுக்காக பெரிய சினிமா நிறுவனங்கள் கூட பல வருடங்களாக காத்திருக்கின்றன.

இபோது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள லியோ படத்திற்கு தாறுமாறான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டாலும் அடுத்தடுத்த புதிய அப்டேட்டுகள் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: ஆடியோ லாஞ்ச் போனா என்ன!.. ரசிகர்களை சந்திக்க வரும் விஜய்!.. பெரிய சம்பவத்துக்கு ரெடியாகும் தளபதி…

வெங்கடபிரபு இயக்கத்தில் தளபதி 68 படம் துவங்கப்பட்டது, லியோ படத்தின் டிரெய்லர் வருகிற 5ம் தேதி வெளியாகிறது என வெளிவந்த செய்திகளால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். லியோ படம் வருகிற 19ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, விஜய் ரசிகர்களும், திரையுலகினரும் இந்த படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

வேலை என வந்துவிட்டால் விஜய் மிகவும் சின்சியர். கதை கேட்டு நடிப்பதாக சொல்லிவிட்டால் படப்பிடிப்பு தளத்தில் எதிலும் தலையிடமாட்டார். இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை செய்துவிட்டு போய்விடுவார். பிரபுதேவா இயக்கத்தில் விஜய், அசின், பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்து 2007ம் வருடம் வெளிவந்த திரைப்படம் போக்கிரி.

இதையும் படிங்க: நம்ம நினைச்சத அவன் சொல்லிட்டான்… இதனால் தான் விஜய் கம்முனு இருக்காரா? அடடே!

இந்த படம் உருவான போது விஜய் - அசின் தொடர்பான ஒரு பாடலை பிரபுதேவா படம்பிடித்து வந்தார். அப்போது இடையிடையே விஜய் கேரவான் பின்னாடி சென்று சென்று வந்துள்ளார். இதைக்கவனித்த பிரபுதேவா அப்படி அடுத்தமுறை விஜய் போனபோது அவரின் உதவியாளரை கூப்பிட்டு ‘விஜய் அங்கே என்ன செய்கிறார் என பார்த்துவிட்டு வா’ என அனுப்பியுள்ளார்.

அங்கு போய் பார்த்தால் விஜய் வாந்தி எடுத்து கொண்டிருந்துள்ளார். இது தெரிந்து பதறிப்போன பிரபுதேவா ‘என்னாச்சி?’ என விஜயிடம் கேட்க ‘கடுமையான காய்ச்சல்.. அதானால் வாந்தி’ என விஜய் சொல்ல பிரபுதேவா ‘இன்றைக்கு படப்பிடிப்பு வேண்டாம். உடல்நிலை சரியானதும் எடுத்துக்கொள்ளலாம்’ என சொல்ல, விஜயோ ‘வேண்டாம் மாஸ்டர் இன்னைக்கு எடுக்க வேண்டியத எடுத்திடுவோம்’ என சொல்லி அந்த நிலையில் நடித்து கொடுத்தாராம்.

இதையும் படிங்க: டிரிங்க் அண்ட் டிரைவ் கேஸில் சிக்கிய விஜய்!.. அப்புறம் என்னாச்சி தெரியுமா?…

 

Related Articles

Next Story