Cinema News
ஒன்னு ஒன்னா கிழிக்க வேண்டாம்! மொத்தமா கிழிச்சா போதும் – லியோ பட தயாரிப்பாளருக்கு வாய் பூட்டு போட்ட தளபதி
Leo Collection Details: சமீபத்தில் விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லியோ. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க அதுவே ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த ஜோடியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தார்கள்.
மேலும் விஜயுடன் சேர்ந்து அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் போன்ற முக்கிய நடிகர்களும் நடித்திருந்தனர். படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த படம் ரிலீஸாகி அந்த எதிர்பார்ப்பை எல்லாம் சுக்கு நூறாக உடைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: சாரி நான் இமயமலைக்கு போகணும்!. ரஜினியை தடுத்து ஒரே நாளில் எடுத்த பாட்டு!.. அட செம ஹிட்டு!…
தேவையில்லாத ஹைப்பை ஏற்படுத்தி படத்தில் எதிர்பார்த்தது இல்லை என்றுதான் பெரும்பாலான ரசிகர்கள் கூறிவந்தார்கள். இந்த நிலையில் லியோ படம் கண்டிப்பாக ஜெயிலர் பட வசூலை முறியடிக்கும் என்றும் படம் கண்டிப்பாக 1000 கோடி வசூல் எனவும் தாறுமாறாக சொல்லி வந்தார்கள்.
ஆனால் ஜெயிலர் வசூலை முறியடிக்குமா என்ற சந்தேகமே படத்திற்கு இருக்கின்றது. முதல் நாள் வசூல் 145 கோடி எனவும் இரண்டாம் நாள் வசூல் 240 கோடி எனவும் மூன்றாவது நாள் வசூல் 300 கோடி எனவும் சமூக வலைதளங்களில் இஷ்டத்திற்கு செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இதையும் படிங்க: தேசிய விருது இயக்குனருக்கே நோ சொன்ன தளபதி..! அது ஒன்னு இல்ல இரண்டு முறையாம்.. ஏன் பாஸ்..?
ஆனால் இதுவரை லியோ படத்தின் தயாரிப்பாளரான லலித் அவர் சார்பாக வசூல் பற்றி எதுவுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதற்கு காரணம் விஜய்தான் என்று சொல்லப்படுகிறது. படம் ரிலீஸாகி நொடிக்கு நொடி நிமிடத்திற்கு நிமிடம் பட வசூலை பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டாம்,
ஒரு வாரம் கழித்து முதல் வார வசூல் இவ்வளவும் என மொத்தமாக சொன்னால் போதுமானது என விஜய் கேட்டு கொண்டதின் பேரில்தான் லலித் வாய் திறக்காமல் இருக்கிறாராம்.
இதையும் படிங்க: யோகிபாபுவை புறக்கணித்த சிவகார்த்திகேயன்.. பின்ன யாரா இருந்தா என்ன?!.. அடிச்ச அடி அப்படி!