கோட் ரிலீஸ்!.. ரசிகர்களுக்கு விஜய் சொன்ன அறிவுரை! கரெக்ட்தான்.. ஆனா கேட்கணுமே!..

by Rohini |   ( Updated:2024-09-03 13:04:42  )
vijay 1
X

vijay 1

Goat movie: நாளை மறுநாள் உலகெங்கிலும் கோட் திரைப்படம் ரிலீஸாக இருக்கின்றது. விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகியிருக்கும் கோட் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

படம் பெரிய அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் இந்தப் படத்தை பற்றி எதுவுமே வெளியிடாத படக்குழு ரிலீஸ் தேதி நெருங்கும் வேளையில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கோட் படத்தை எடுக்க ராஜமவுலிதான் காரணம்!.. இப்படி சொல்லிட்டாரே வெங்கட்பிரபு!..

இதுவே ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. விஜயின் எந்தவொரு படம் ரிலீஸானாலும் அந்தப் படத்திற்கு ஏதாவது ஒரு வகையில் இடையூறுகள் வரத் தொடங்கும். அதுவும் அரசியலில் முழுவதுமாக இறங்கிய பிறகு வராமல் இருக்குமா? டிக்கெட் பிரச்சினை மற்றும் அதிகாலை ஷோ என கோட் படத்திற்கு சில தடைகள் போடப்பட்டதாக தெரிகிறது.

இது விஜய்க்கு வழக்கமான ஒன்றாக இருந்தாலும் அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அதாவது கோட் படம் ரிலீஸாகும் நேரத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு படத்தை கொண்டாட வேண்டும் என தன் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயிற்காக களமிறங்கிய ரசிகர் கூட்டம்… கோட் டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை…

மேலும் அரசியலிலும் கால்பதித்துள்ளதால் தனது ரசிகர்களுக்கு தொண்டர்களுக்கு பொதுவான அட்வைஸ்களையும் கூறியுள்ளார். எந்த விதத்திலும் யாருக்கும் தொந்தரவாக இருக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் ரசிகர்கள் கேட்பார்களா? என்பதுதான் சந்தேகம். ஆரவாரத்தில் தியேட்டர் பென்சை உடைப்பது, ஸ்கிரீனை கிழிப்பது என ஏதாவது அசாம்பாவிதங்கள் நடந்தால் இது ஒன்றே போதும். விஜய்க்கு எதிராக ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் சேர்ந்துவிடும். இதை மனதில் வைத்தே தனது தொண்டர்களை அமைதியாக இருக்குமாறு விஜய் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ரஜினி எனக்கு மகான்! மூத்த நடிகையை கதற வைத்த சூப்பர் ஸ்டார்.. என்ன விஷயம் தெரியுமா?

Next Story