More
Categories: Cinema History Cinema News latest news

அரசியலில் குதித்த விஜய்க்கு அஜீத்தின் ஆதரவு இருக்குமா? சவால்களில் சாதிப்பாரா?

Actor Vijay: நடிகர் விஜய் சினிமாவில் மாஸ் ஹீரோ. அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலிலும் குதித்துள்ளார். அவர் நினைத்தது போல வெற்றிக்கனியைப் பறிப்பாரா என்பதைப் பற்றி பிரபல சினிமா விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான சபீதா ஜோசப் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா?

கமல், அரசியலில் இறங்கியதும் நட்பின் காரணமாக ரஜினியைப் போய் பார்த்தார். அவரும் வாழ்த்தினார். ஆனால் ஆதரவு தருகிறேன் என சொல்லவில்லை. கமலும் அவரிடம் போய் ஆதரவும் கேட்கவில்லை. அதே போல விஜயும் நண்பர் என்ற முறையில் அஜீத்தைப் போய் பார்க்கலாம்.

Advertising
Advertising

ஆனால் அவர் ஆதரவு தருவாரா என்பது அப்போதைய அவரது மனநிலையைப் பொறுத்தது. விஜய் அரசியல்வாதியானதும் அவரை வாழ்த்தலாம். அஜீத்தைப் பொறுத்தவரை இதுவரை யாரையும் ஆதரிக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை ரசிகர் மன்றமே வேண்டாம் என்று சொன்னவர். அவர் தனது ரசிகர்களிடம் விஜயை ஆதரியுங்கள் என்று எப்படி சொல்ல முடியும்.

Vijay

2026 சட்டமன்றத் தேர்தலில் தான் விஜய் போட்டியிடுவதாக சொல்லி இருக்கிறார். அப்போது அவர் தனித்து இருக்கலாம். அல்லது கூட்டணியுடன் இருக்கலாம். தற்போது உள்ள இரு திராவிட கட்சிகளையும் விட இவர் நல்ல விஷயங்களைச் செய்வார் என்ற தோற்றம் மக்களிடம் வரவேண்டும்.

2 அரசியல் கட்சிகளுக்குமே 20 சதவீதம் செல்வாக்கு உள்ளது. ஆனால் அவர்களுக்குத் தேவையானது 10 சதவீதம் தான். ஆனால் விஜய் 30 சதவீதம் ஓட்டு வந்தால் தான் ஜெயிக்க முடியும். கட்சிக்காரர்கள் மட்டும் ஓட்டுப் போட்டால் ஜெயிக்க முடியாது. மக்கள் மத்தியிலும் வாக்கு விழ வேண்டும்.

விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய பக்குவம் ஒரு அரசியல்வாதிக்குத் தேவை என எஸ்ஏ.சந்திரசேகர் சொல்வார். அது விஜயிடம் உண்டா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மக்கள் மத்தியில் அரசியல் சார்ந்த நிறைய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும். அப்போது தான் மக்கள் ஆதரவைப் பெற முடியும். இடைப்பட்ட 2 ஆண்டுகள் அரசியல் சார்ந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவலை மூத்த பத்திரிகையாளரும், பிரபல சினிமா விமர்சகருமான சபீதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v

Recent Posts