ரஜினி கொடுத்த பதிலடி!. என்னையே செய்ய பாக்குறியா?!. அனிருத் மீது கடுப்பில் இருக்கும் விஜய்?..

சமீப காலமாக விஜய், ரஜினி ரசிகர்களுக்கிடையே ஓடிக்கொண்டிருக்கும் பஞ்சாயத்து தான் ஹாட் டாப்பிக் என்றே கூறலாம். விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பலர் கூறிவருவதும், அதற்கு பதிலடி தரும் வகையில் ஜெயிலர் படத்தின் பாடல் வரிகள் இடம்பெற்றிருந்ததும் நமக்கு தெரிந்த விஷயம் தான். இந்த பிரச்சனையில் முக்கியமான ஒரு நபரை நாம் அனைவரும் மறந்துவிட்டோம்.

jailer

ஆனால் விஜய் மறக்கவில்லை. விஜயின் லியோ படத்திற்கும், ரஜினியின் ஜெயிலர் படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர். அனிருத்திற்கு தெரியாமல் ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடல் வெளியாகியிருக்க வாய்ப்பில்லை. இன்னும் சொல்லப்போனால், அனிருத் நினைத்திருந்தால், அந்த வரிகளை மாற்ற சொல்லியிருக்க முடியும். அப்படி நடந்திருந்தால், எந்த பிரச்சனையும் வந்திரு்ககாது.

vijay ani

ஆனால் அவர் அதையெல்லாம் செய்யவில்லை. தான் ஒரு விஜய் ரசிகர் என்று எல்லா மேடைகளிலும் சொல்லி வருபவர் அனிருத். அது மட்டுமில்லாமல், அனிருத், விஜய் இடையே நெருக்கமான நட்பு இருப்பதும் உண்மை தான். இந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வரும் சூழ்நிலையில், இந்த ஜெயிலர் பாட்டு சர்ச்சை ஒரு பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிட்டது.

இதற்கு அனிருத்தும் ஒரு முக்கிய காரணம் என்பதால், விஜய் அனிருத் மீது கோபத்தில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் அனிருத் என்ன பேசப்போகிறார்.

anirudh

இந்த பாடல் சர்ச்சைக்கு ஏதேனும் விளக்கம் கொடுப்பாரா என்று விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த பிரச்சனையால் விஜய், அனிருத் நட்பில் ஏதேனும் விரிசல் விழுமா அல்லது விரைவில் சமாதானம் ஆகிவிடுவார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க- முதுகில் குத்திய பிரபல நடிகர்.. விரக்தியில் அப்பாஸ் எடுத்த விபரீத முடிவு.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!…

 

Related Articles

Next Story