இனிமேல் செருப்பே அணியமாட்டேன்! இப்படி ஒரு திடீர் முடிவை விஜய் ஆண்டனி எடுக்க காரணம்
Actor Vijay Antony: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன் கெரியரை ஆரம்பித்த விஜய் ஆண்டனி தன் இசையின் மூலம் இளசுகளை ஆடவைத்தார். இவர் இசையில் அமைந்த பெரும்பாலான பாடல்கள் சென்னை பாஷையில் குத்துப் பாடல்களாகத்தான் அமைந்திருக்கும்.
குறிப்பாக டாக்ஷி..டாக்ஷி பாடல் மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்த பாடல். அதற்கு இணையான புகழை பெற்ற பாடலாக நாக்கமுக்கா பாடல் பட்டிதொட்டியெல்லாம் எங்கும் கேட்டுக் கொண்டிருக்கும். இப்படி பல பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி திடீரென ஹீரோவாக களமிறங்கி ஆச்சரியப்படுத்தினார்.
இதையும் படிங்க: விஜயா ஓவர்பில்டப்பா இருக்கே!… பெர்மான்ஸை குறைமா ஸ்ருதி!… சிறகடிக்க ஆசையின் அட்டகாசங்கள்
ஆரம்பத்தில் இவர் ஹீரோவாக நடித்து அந்த படம் மக்கள் மத்தியில் எப்படி ஒரு வரவேற்பை பெறும் என்ற அச்சம் இருந்தது. ஆனால் அதை முற்றிலும் தகர்ந்தெறிந்தார் விஜய் ஆண்டனி. ஹீரோவாக நடித்த சலீம், நான், பிச்சைக்காரன் போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
விஜய் ஆண்டனி படம் என்றாலே நம்பி பார்க்க போகலாம் என்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவர் நடிப்பில் ஹிட்லர் என்ற படம் திரைக்கு வரவிருக்கிறது. அந்தப் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில்தான் விஜய் ஆண்டனி இப்போது பிஸியாக இருக்கிறார்.
இதையும் படிங்க: டாக்டர் சொல்லியும் கேட்காம நடிச்சி ரத்த வாந்தி எடுத்த சிவாஜி!.. டெடிக்கேஷன்னா நடிகர் திலகம்தான்!..
சமீபத்தில் கூட ஹிட்லர் படம் குறித்து ஒரு பத்திரிக்கையாளர் கூட்டம் நடைபெற்றது.அப்போது ஹிட்லர் படம் குறித்தும் அவரின் ரொமான்ஸ் காட்சிகள் குறித்தும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு மிகவும் பொறுமையாக பதில் அளித்து வந்தார் விஜய் ஆண்டனி.
அதன் பிறகு ஒரு பத்திரிக்கையாளர் விஜய் ஆண்டனியிடம் ‘சார் இது மிகவும் பர்ஷனல் கேள்வி. சொல்ல வேண்டுமென்றால் பதில் சொல்லுங்கள். இல்லையென்றால் வேண்டாம்’ என்று சொல்லியே அந்த கேள்வியை கேட்டார். அதாவது ‘சமீபகாலமாக ஏன் நீங்கள் செருப்பே அணிவதில்லை?’ என்று கேட்டார்.
இதையும் படிங்க: ஐஸ்வர்யாவின் ஆசையில் மண்ணைப் போட்ட ஜெயம் ரவி!.. கல்லா கட்டுமா லால் சலாம்?…
அதற்கு விஜய் ஆண்டனி ‘அதற்கு காரணம் என ஒன்றுமில்லை. திடீரென என் மனதில் பட்டது. இனிமேல் செருப்பே அணிய வேண்டாம் என தோன்றியது. அதுவும் நல்லதுதான் என என் மனதிற்கு பட்டது. அதன் காரணமாகவேதான் செருப்பு அணியவில்லை’ என்று கூறினார்.