விபத்துக்கு பின் முகமே மாறிப்போச்சு!.. விஜய் ஆண்டனியின் புதிய போட்டோ இதோ!…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். நான் என்கிற திரைப்படம் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து இவரின் திரைப்படங்கள் வெற்றியடையவே முன்னணி நடிகராகவும் மாறினார்.
அதுவும் பிச்சைக்காரன் படத்தின் வெற்றி தெலுங்கிலும் இவருக்கு ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ளது. எனவே, அதன்பின் உருவான விஜய் ஆண்டனி படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. பிச்சைக்காரன் படத்தை இயக்குனர் சசி இயக்கியிருந்தார்.
அந்த படத்திற்கு பல படங்களில் விஜய் ஆண்டனி நடித்தார். அதில் பிச்சைக்காரன் 2 படமும் ஒன்று. இந்த படம் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராகவும் மாறினார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. அப்போது ஒரு ஸ்பீட் போட்டை விஜய் ஆண்டனி ஓட்டிய போது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த ஒரு படகின் மீது மீது தண்ணீரில் மூழ்கினார். நல்லவேளையாக அவரை படக்குழுவினர் காப்பாற்றி உயிர் பிழைக்க வைத்தனர்.
அந்த விபத்தில் அவரின் மூக்கு மற்றும் தாடையில் பலத்த அடி ஏற்பட்டது. அதன்பின் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூக்கிலும், தாடையிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தான் நலமாக இருப்பதாக விஜய் ஆண்டனி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், பிச்சைக்காரன் 2 செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இன்று விஜய் ஆண்டனி வந்திருந்தார். மூக்கு மற்றும் தாடையில் அறுவை சிசிச்சை செய்யப்பட்டதால் அவரது முகமே கொஞ்சம் மாறியிருக்கிறது.