ஆரம்பத்திலேயே ஃபுல் ஸ்டாப்பா.. தளபதி-67 பூஜையில் ரசிகர்களை ஏமாற்றிய விஜய்!..

vijay
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் தலைவனாக இப்பொழுது மாஸாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். எப்படா முடிப்பீங்க தமிழ் நாட்டு பக்கம் போகனும் என்ற மன நிலையில் இருந்த விஜயையை ஒரு வழியாக லோகேஷ் அலேகா தூக்கிட்டு வந்து இன்று பூஜை போட வைத்துவிட்டார்.

vijay
ஆம் வாரிசு படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்த நிலையில் இன்று லோகேஷின் அடுத்த படமான தளபதி-67 படத்தின் பூஜை வெற்றிகரமாக சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் போட்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த பூஜையை மிகவும் எளிமையாக முடித்திருக்கின்றனர் படக்குழு.
குறிப்பாக லோகேஷ், விஜய், மற்றும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டிருக்கின்றனர். 7ஆம் தேதி படத்திற்கான புரோமோ வீடியோவை எடுக்க இருக்கின்றனர். இது ஒருபக்கம் இருக்க நேற்று வாரிசு படத்தின் இரண்டாம் சிங்கிள் வெளியாகி அது மிகவும் டிரெண்டிங்காகி போய்க் கொண்டிருக்கின்றது.

vijay
இதையும் படிங்க : அடேய்களா! இதுவும் காப்பி தானா.. தீ தளபதி பாடலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்.. எந்த பாட்டோட காப்பி தெரியுமா?
இந்த நிலையில் இன்று தளபதி - 67 பூஜை என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அது சம்பந்தமான புகைப்படங்கள் கண்டிப்பாக இணையத்தில் பரவி வைரலாகும். அதை வைத்து ஒரு வாரம் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
ஒரு புகைப்படம் கூட இன்று வெளியாகவில்லை. ரசிகர்கள் சிலர் ட்விட்டரில் எங்கே தளபதி - 67 புகைப்படங்கள் என்று கேட்டு வருகின்றனர். இதற்கு பின்னாடி இருக்கும் காரணம் விஜய் தான் என்று சொல்லப்படுகிறது. பூஜை போடும் புகைப்படம் கூட வெளியில் வரக்கூடாது என்று விஜய் சொன்னதாக சில தகவல்கள் சொல்லப்படுகிறது.

lokesh
வாரிசு படத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் தான் இது மாதிரி யோசிக்க வைத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே எந்த ஒரு புகைப்படமும் வெளிவரவில்லை என்று தெரிகிறது.