தல, தளபதி மாஸ் பண்றாங்களே! அஜித்துக்கு போட்டியா கெத்து காட்டிய விஜய்
Ajith Vijay: தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த படியாக அவர்களுக்கு இணையான புகழையும் அந்தஸ்தையும் பெற்ற நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இருவருமே நல்ல நண்பர்களாக இருப்பினும் தொழில்முனையில் இருவருக்கும் இடையே சரியான போட்டி நிலவி வருகின்றது. அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் அடுத்த படத்திற்கான ஆலோசனையிலும் இருக்கிறார். இன்னொரு பக்கம் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் விஜய். இருவருமே இந்த தமிழ் சினிமாவில் போற்றப்படும் நடிகர்களாக உயர்ந்து நிற்கின்றனர்.
இதையும் படிங்க: ரஜினியுடன் நடிச்சப்ப ஒன்னும் நடக்கலை… விஜயுடன் வேற மாதிரி ஆச்சு… ஓபனாக உடைத்த பிரபல நடிகை!..
இவர்களுக்கு இருக்கும் மாஸ் வேறெந்த நடிகர்களுக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். உயிரை பணயம் வைத்து நடித்தாலும் மற்ற நடிகர்களுக்கு இவர்களை போல் ஒரு அங்கீகாரம் கிடைப்பதில்லை.
இருவரது ரசிகர்களும் அஜித் மற்றும் விஜயை கடவுளை விட பெரிதாக எண்ணுகின்றனர். மேலும் சோசியல் மீடியாவில் இருவரையும் புகழ்ந்து நாள்தோறும் ஏதாவது ஒரு செய்தியை வைரலாக்கியும் வருகின்றனர். அஜித்தை பொறுத்தவரைக்கும் ரசிகர்களை ஒரு முறையாவது நேரில் சந்தித்து பேசியதே இல்லை.
இதையும் படிங்க: அந்தகன் படத்துக்கு பிறகு ஹீரோயின்களை எச்சரித்த ப்ரியா ஆனந்த்! பிரசாந்த் இப்படியா?
இருந்தாலும் அவருக்குண்டான ரசிகர் பட்டாளம் எண்ணிலடங்காதது. இந்த நிலையில் விஜய் சமீபத்தில் ஒரு புதிய ப்ராண்டட் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதுதான் சோசியல் மீடியாவில் இப்போது மிகவும் டிரெண்டாகி வருகின்றது.
lexux lm என்ற ப்ராண்டில் அமைந்த அந்த சொகுசு காரின் விலை மார்கெட்டில் சுமார் 2 லிரிந்து 2.30 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதே போல் தான் அஜித்தும் சமீபத்தில் ஃபெராரி காரை வாங்கி மாஸ் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிஆர்பி இருந்தும் டாப்ஹிட் சீரியலுக்கு மூடுவிழா வைத்த சன் டிவி… அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C-meRzxPxTs/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==