கோட் படத்தில் விஜயகாந்த்!.. விஜய் போட்ட கண்டிஷன்!. பதட்டத்தில் வெங்கட்பிரபு...

by சிவா |
vijay
X

நடிகராக சிலருக்கு பிடிக்காமல் போனாலும் ஒரு நல்ல மனிதராக எல்லோருக்கும் பிடித்தவர்தான் விஜயகாந்த். தங்க மனசுக்கு சொந்தக்காரர். தன்னிடம் பிரச்சனை என எவர் வந்தாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். கஷ்டம் என வருபவர்களுக்கு அள்ளி கொடுத்தவர். பசியால் வாடிய பலருக்கும் சோறு போட்டவர். பலரையும் பசியை பார்க்க விடாமல் தடுத்தவர் என்றும் சொல்லலாம்.

விஜயகாந்த் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதுதான். எல்லோரிடமும் அன்பு காட்டுபவர். சுயநலம் இல்லாத மனிதராக இருந்தவர். அதனால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்தது. அதனால்தான் அவரின் இறுதி ஊர்வலத்தில் அத்தனை லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

Vijayakanth

Vijayakanth

அதனால்தான் அவர் இறந்த செய்தி கேட்டு பலரும் மனம் வருந்தினார்கள். அவருக்கு மட்டும் உடல் நலம் நன்றாக இருந்து அரசியலில் இருந்திருந்தால் கண்டிப்பாக பெரிய இடத்திற்கு சென்று மக்களுக்கு நல்லது செய்திருப்பார் என பலரும் சொல்வதுண்டு. அவர் உயிரோடு இருக்கும்போது ஒரு காட்சியில் நீங்கள் நடித்து கொடுக்க வேண்டும் என அன்புடன் யாராவது கேட்டால் உடனே சம்மதம் சொல்லி நடித்து கொடுப்பார் விஜயகாந்த்.

இப்போது அவர் இல்லாத நிலையில் தொழில்நுட்பம் மூலம் அவரை சினிமாவில் நடிக்கவைக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். அப்படித்தான் கோட் படத்தில் சில காட்சிகளில் விஜயகாந்தை கொண்டு வரும் முயற்சியில் வெங்கட்பிரபு ஈடுபட்டிருக்கிறார். இதற்காக பிரேமலதாவிடம் நடையாய் நடந்து அனுமதி வாங்கி இருக்கிறார்.

இந்நிலையில், ‘விஜயகாந்த் வரும் காட்சி நிஜம் போலவே இருக்க வேண்டும். அவரின் உருவம் சரியாக இல்லை என்றால் நான் அனுமதிக்க மாட்டேன். கிராபிக்ஸ் வேலை கச்சிதமாக இருக்க வேண்டும். ட்ரோலில் சிக்குவது போல அவரின் உருவமோ, கதாபாத்திரமோ இருக்கக் கூடாது’ என கறார் கண்டிஷன் போட்டு இருக்கிறாராம் விஜய்.

எனவே, மிகுந்த கவனத்துடன் விஜயகாந்த் வரும் காட்சி தொடர்பான வேலைகளை பார்த்து பார்த்து செய்து வருகிறாராம் வெங்கட்பிரபு. விஜயகாந்த் இறந்துவிட்ட நிலையில் அவரை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு எந்த வகையிலும் ஏமாற்றத்துடன் முடிந்துவிடக்கூடாது என சொல்லி இருக்கிறாராம் தளபதி விஜய்.

Next Story