அடுத்த படத்தின் இயக்குனரை லாக் செய்த விஜய்?!... அட அவரா?!.. எதிர்பார்க்கவே இல்லையே!...
Thalapthy 69: விஜய் இப்போது வெங்கட்பிரபுவின் ‘கோட்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு படத்தின் வேலை 50 சதவீதம் முடிந்து விட்டால் அடுத்த படத்தின் வேலையை துவங்குவார். அதாவது, இயக்குனர்களை அழைத்து கதை கேட்டு அதில் ஒரு கதையை தேர்ந்தெடுப்பார். அதன்பின், தயாரிப்பாளர் யார் என்பதையும் முடிவு செய்வார்.
ஆனால், விரைவில் அவர் அரசியலுக்கு வரவிருப்பதால் 2 வருடங்கள் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கமாட்டார் என ஒருபக்கம் செய்திகளும் வெளியானது. இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது. அதேநேரம், அரசியலில் அவர் வருதையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்ததும் அதுவும் அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவே இருந்தது.
இதையும் படிங்க: லோ பட்ஜெட் படமா? அதுவும் நானா? கனா இயக்குனருக்கு நடந்த விபரீதம்.. அன்னபூரணி என்னம்மா நீங்க?
ஆனால், உண்மையிலேயே அஜித் அந்த முடிவை எடுப்பாரா என்கிற சந்தேகமும் பலருக்கும் இருந்தது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கப்போவது 2026ம் வருடம்தான். எனவே, கண்டிப்பாக அவர் திரைப்படங்களில் நடிப்பார் எனவும் விஜய் தரப்பு சொல்லப்பட்டது. தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, இயக்குனர்களிடம் கதை கேட்கும் வேலையை துவங்கினார்.
இந்நிலையில், கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் விஜய் நடிக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய்க்கு சில கதைகளை கார்த்திக் சுப்பாராஜ் சொல்லி இருக்கிறார். ஆனால், அது ஒர்க் ஆவுட் ஆகவில்லை. சமீபத்தில் கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா 2 மாபெரும் வெற்றியை பெற்றது.
எனவே, விஜய் அவரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்பாராஜ் இந்த படம் மூலம் விஜயை இயக்கும் இயக்குனராகவும் மாறவிருக்கிறார்.
இதையும் படிங்க: ஓவரா இருக்கு.. அடக்கி வாசி!. ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜெயலலிதாவை கண்டித்த எம்.ஜி.ஆர்…