'கிளைமாக்ஸ் புடிக்கல'.. சூப்பர் படத்தை 'மிஸ்' பண்ணிய விஜய்..

by சிவா |
vijay
X

vijay

அண்ணா யாரு தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் வினோத் இயக்கத்தில் நடிக்கும் படம்தான் அவரது கடைசி படமாக அமைந்துள்ளது. இதற்கு பிறகு முழுநேர அரசியலில் அண்ணா குதிக்க போகிறார். இதனால் அவரது அன்பு ரசிகர்கள் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்தநிலையில் கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை என்று விஜய் ஒரு சூப்பர்ஹிட் படத்தை மிஸ் செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மலையாளத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த படம் மீசை மாதவன். திலீப், காவ்யா மாதவன், ஜகதி ஸ்ரீகுமார், இந்திரஜித் சுகுமாரன் ஆகிய நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வசூலை ஈட்டியது.

இதையும் படிங்க: எம்ஜிஆர் பட தயாரிப்பாளரை சகட்டு மேனிக்குத் திட்டிய வாலி… தலைவரோட ரியாக்ஷன் என்ன தெரியுமா?

இதையடுத்து படத்தின் இயக்குனர் லால் ஜோஸ் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டு, அப்போது தமிழில் வளர்ந்து வந்த நடிகர் விஜயை அணுகி இருக்கிறார். படத்தின் கதையை கேட்டு விஜய், 'படம் எனக்கு பிடித்துள்ளது. ஆனால் கிளைமேக்ஸ் அவ்வளவு நன்றாக இல்லை. எனக்கு இது செட் ஆகாது' என ரிஜெக்ட் செய்து விட்டார்.

அதற்கு பிறகு அப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படவில்லை. இதை அண்மையில் படத்தின் இயக்குனர் லால் ஜோஸ் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். ஒருவேளை இந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் அவரது இமேஜ் மாறியிருக்கலாம். மாறாமலும் போய் இருக்கலாம். என்றாலும் நல்ல ஒரு படத்தை விஜய் மிஸ் செய்து விட்டாரே என்று தோன்றத்தான் செய்கிறது.

Next Story