என் வாழக்கையில உனக்காக மட்டும்தான் இத செஞ்சிருக்கேன்!.. வெங்கட்பிரபுவிடம் சொன்ன விஜய்!..
பொதுவாக நடிகர்கள் தாங்கள் நடிக்கப்போகும் கதாபாத்திரத்திற்காக பெரிதாகவெல்லாம் மெனக்கெட மாட்டார்கள். அப்போது அவர்களின் தோற்றம் எப்படி இருக்கிறதோ அந்த தோற்றத்திலேயே நடிப்பார்கள். விஜய், விஷால், கார்த்தி, சூர்யா, ஜெயம் ரவி, ஜீவா என பலரையும் அதற்கு உதாரணமாக சொல்லமுடியும்.
ஆனால், கமல்ஹாசன், விக்ரம் போல சில நடிகர்கள் மட்டுமே தாங்கள் நடிக்கப்போகும் கதாபாத்திரங்களுக்காக தனது தோற்றத்தையே மாற்றுவார்கள். ஐ படத்திற்கு விக்ரம் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது வெளியே யாருக்கும் தெரியாமல் போனது. தனது உடல் எடையில் பாதியை குறைத்து நடித்தார் விக்ரம்.
விஜயெல்லாம் நம்பர் ஒன் நடிகராக இருந்தும் இதுவரை தோற்றத்துக்காக அவர் பெரிதாக மெனக்கெட்டதில்லை. அதிகபட்சம் அவரின் தலையில் வைக்கப்படும் விக் மற்றும் மாறிக்கொண்டே இருக்கும். அதேபோல், கடந்த சில வருடங்களாகவே அவர் முகத்தை கிளீன் சேவ் செய்வதில்லை.
பெரும்பாலான படங்களில் கொஞ்சம் தாடியுள்ள முகத்தில்தான் நடித்தார். பீஸ்ட், வாரிசு, லியோ போன்ற எல்லா படங்களிலுமே தாடி வைத்தே நடித்தார் விஜய். மேலும், சினிமாவில் நடிக்காத போதும் தாடியுடனே வலம் வந்தார் விஜய். இப்போது வெங்கடபிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. உலகம் முழுவதும் அட்வான்ஸ் புக்கிங்ஸ் பரபரப்பாக போய்கொண்டிருக்கிறது. கோட் ஒரு பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியிருப்பதால் எப்படியும் பல நூறு கோடிகளை இப்படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஊடகமொன்றில் பேசிய வெங்கட்பிரபு ‘இந்த படத்தில் ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறோம். எனவே, விஜய் சார் முகத்தை ஃபுல் ஸ்கேன் செய்ய அவர் தனது தாடியை சேவ் செய்ய வேண்டியிருந்தது. அவரே என்னிடம் ‘என் வாழ்க்கையில முதன் முதலா உனக்காகத்தான் ஃபுல் கிளீன் சேவ் பண்ணி இருக்கேன்’ என சொன்னார்’ என சொல்லி இருக்கிறார்.