கராத்தே ஹுசைனியின் கடைசி ஆசையை நிறைவேற்றாத விஜய்!.. இட்ஸ் ராங் புரோ!...

by சிவா |
vijay
X

#image_title

Karate hussaini: தமிழகத்தில் பல வருடங்களுக்கு முன்பே கராத்தே பற்றி பலரும் தெரிந்துகொள்ள காரணமாக இருந்தவர் ஹுசைனி. கராத்தே மட்டுமின்றி பலருக்கும் வில் வித்தை பயிற்சியும் கொடுத்திருக்கிறார். இவரிடம் பல மாணவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக நடிகர் விஜய் மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் ஹுசைனியின் மாணவர்களாக இருந்திருக்கிறார்கள்.

விஜய் நடித்த பத்ரி படத்தில் அவருக்கு பயிற்சி கொடுக்கும் மாஸ்டராக ஹுசைனி நடித்திருந்தார். விஜய் தரையில் கையை நீட்டி படுத்துக்கொள்ள அவரின் கையில் பல கார்கள் ஏறிப்போகும். அதற்கான பயிற்சியை கொடுத்தவர் ஹுசைனிதான். நிஜ வாழ்விலும் இப்படி பல சாதனைகளை செய்து காட்டியவர் ஹுசைன்.

husaini

#image_title

மிகவும் தன்னம்பிக்கையான ஹுசைனி இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹுசைனி தனக்கு தினமும் 2 பாட்டில் ரத்தம் தேவைப்படுவதாகவும், சில நாட்களில் நான் இறந்துவிடுவேன் எனவும் சொல்லி பலரையும் அதிர வைத்தார். இதையடுத்த்து பல திரைப்பிரபலங்கள் அவரை நேரில் சென்று பார்த்தனர்.

இந்நிலையில்தான், நேற்று நள்ளிரவு ஹுசைனி மருத்துவமனையிலேயே மரணமடைந்தார். ஏற்கனவே, தனது உடலை அவர் தானம் செய்திருக்கிறார். மேலும், தனது இதயத்தை தன்னுடைய மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தன்னை பார்த்தால் சந்தோஷப்படுவேன் என சொல்லியிருந்தார். ஆனால், விஜய் அவரை நேரில் போய் பார்க்கவே இல்லை. அதேபோல், தெலுங்கு நடிகர் மற்றும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணையும் பார்க்க ஹுசைனி ஆசைப்பட்டார். அதுவும் நடக்கவில்லை.

#image_title

நடிகர் விஜய் இப்போது அரசியலுக்கு வந்துவிட்டார். உயிருக்கு போராடும் ஒருவர் கோரிக்கை வைத்தும் விஜய் அதை கண்டுகொள்ளவில்லை. விஜய் அதை செய்திருந்தால் மரணத்திற்கு முன் அந்த சந்தோஷமாவது ஹுசைனிக்கு கிடைத்திருக்கும் என சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story