புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் உதவி வழங்காதது குறித்து நடிகர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல்:
வங்ககடலில் கடந்த வாரம் ஃபெஞ்சல் புயல் உருவானது. இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஃபெஞ்சல் புயலானது புதுச்சேரி மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று இடம் மாறி மரக்காணம் புதுச்சேரி இடையே கரையை கடந்தது.
இதையும் படிங்க: என்னைத் தவிர யாரையும் விடமாட்டேன்.. பா ரஞ்சித்துக்கு கட்டளையிட்ட சந்தோஷ் நாராயணன்
இதனால் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் சேதமடைந்தன. அதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் 51 சென்டிமீட்டர் மழை பதிவானது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து பலரும் உதவி செய்து வருகிறார்கள். மேலும் பல மக்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ள நிலையில் அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தவெக தலைவர் உதவி:
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதாவது அமைந்தகரை, டி.பி சத்திரம் ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கியிருந்தார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி, புது துணிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. இதனை பார்த்த பலரும் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள் அதிலும் ப்ளூ சதை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பல கிலோமீட்டர் பயணிக்க வைத்து தனது ஆபீஸில் நிவாரணம் வழங்குகிறார்.
இவரே நேரடியாக சென்று களத்தில் இறங்கி பாதிப்பை பார்த்து மக்களுக்கு உதவி வழங்க வேண்டும். இப்படி ஏழை மக்களை சிரமப்படுத்தி நீண்ட தூரம் பயணிக்க வைத்து தன் இடத்திற்கு வரவழைப்பது மன்னர் காலத்தில் கூட நடந்தது கிடையாது. இவரா மக்களுக்கு நல்லது செய்யப் போகின்றார் என்று விமர்சித்து பேசியிருந்தார்.
நடிகர் விஜய் விளக்கம்:
சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் இருந்து வந்த நிலையில் நடிகர் விஜய் மக்களுக்கு நேரில் சென்று உதவிகள் செய்யாதது குறித்து விளக்கம் கொடுத்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: ‘உங்கள் வீடுகளுக்கு வந்து நலத்திட்ட உதவிகளை நான் வழங்கி இருக்கலாம். ஆனால் உங்களுடன் இப்படி அமர்ந்து பேச முடியாது.
இதையும் படிங்க: ஏன் இவர் நேரில் போய் உதவி செய்ய மாட்டாரா?!. சொகுசு அரசியல் செய்கிறாரா விஜய்?..
அங்கு வந்தால் நெரிசல் ஏற்படும். உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும். நேரம் செலவிட முடியாது. நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என்று என்னை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
Pushpa2 Review:…
Power Star: தமிழ்…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…