புதிய கீதை to ஜனநாயகன்!.. விஜய் படங்கள் சந்தித்த பிரச்சனைகள்!.. பெரிய லிஸ்ட்டே இருக்கு!…

Published on: January 10, 2026
vijay
---Advertisement---

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனையில் சிக்கி நேற்று வெளியாகாமல் போனது விஜய் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் அரசியலுக்கு சென்று விட்டநிலையில் ஜனநாயகன் கடைசி படம் என்பதால் அவரை சினிமாவிலிருந்து வழியனுப்பும் நிகழ்ச்சியை சிறப்பாக செய்ய வேண்டும்.. படத்திற்கு பேர் ஆதரவு கொடுக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் நினைத்திருந்தனர்.. ஆனால் அவர்களின் ஆசையில் மண் விழுந்துவிட்டது.

தணிக்கை வாரியம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான கெடுபிடி காட்டி இந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்திருக்கிறது. அவர்கள் என்ன சட்டம் பேசினாலும் அதை பலரும் ஏற்க தயாராக இல்லை. ஒருபக்கம்ம், விஜயின் படம் ரிலீஸின் போது பிரச்சனையில் சிக்குவது என்பது இது முதன்முறை அல்ல. பலமுறை அப்படி நடந்திருக்கிறது.

அவரின் புதிய கீதை படம் வெளிவந்த போது தலைப்பை மாற்றுமாறு சிலர் பிரச்சனை செய்தார்கள்.. காவலன் படம் வெளியான போது சுறா படத்திற்காக நஷ்ட ஈடு கேட்டு சிலர் பிரச்சனை செய்தார்கள்.. துப்பாக்கி படம் வந்தபோது தலைப்பு என்னுடையது என பிரச்சனை செய்தார்கள்.. தலைவா படம் சொன்ன தேதியில் ரிலீஸாகாமல் இரண்டு நாட்கள் கழித்து வெளியானது. இப்படத்தின் தயாரிப்பாளர் நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Thalaiva
Thalaiva

கத்தி படம் உருவானபோது தயாரிப்பாளர் இலங்கையை சேர்ந்தவர் என்று சிலர் பிரச்சினை செய்தார்கள்.. சிலர் கதை திருட்டு பிரச்சனையை கொண்டு வந்தார்கள்.. புலி படம் வெளியானபோது விஜய் வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.. மெர்சல் படத்தின் இறுதி காட்சியில் விஜய் பேசும் ஒரு வசனத்திற்காக பாஜகவினர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தார்கள்..

சர்கார் படம் வந்தபோது அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு கதாபாத்திரத்தின் பெயருக்காக ஒரு அரசியல் கட்சி பிரச்சனை செய்தது. தியேட்டரில் இருந்த பேனர், போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.. அதோடு இந்த கதை என்னுடையது என வேறு ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்து அந்த பஞ்சாயத்தும் நடந்தது.. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்களை போலீசார் தாக்கிய சம்பவம் நடந்தது.

vijay

மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருந்தபோது வருமான வரித்துறையினர் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கே சென்று விஜயை அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.. தற்போது ஜனநாயகன் படத்திற்கு சென்சார் ரூபத்தில் பிரச்சனை வந்திருக்கிறது.. ஆனாலும் இது எல்லாவற்றையும் தாண்டி ஜனநாயகன் திரைப்படம் இந்த மாத இறுதிக்குள் வெளியாகி பெரிய ஹிட் அடிக்கும் என விஜய் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.