அவசரப்பட்டு அரசியலுக்கு வந்துட்டோமே!. ஜெர்க் ஆன விஜய்!.. கசிந்த பகீர் தகவல்!..

நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து தான் அரசியலுக்கு வருவது பற்றி தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தார். ஒருபக்கம் சினிமாவில் அவரின் கிராப் ஏறிக்கொண்டே போனது. ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி நம்பர் ஒன் இடத்துக்கு மாறினார்.
அந்த நிலையில்தான் திடீரென தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் எனவும் அறிவித்தார். அதோடு, பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிட போவதில்லை எனவும், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் எனவும் அறிவித்தார்.
இதையும் படிங்க: ரஜினியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் தான் அந்த படமா? ஓ அதான் அப்படி செஞ்சாரா?
ஆனால், ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட அவர் நடத்தாமல் கட்சி ஆரம்பித்தது விமர்சனத்திற்கு உள்ளானது. இரண்டு முறை கட்சி லெட்டர் பேடில் அறிக்கை வந்தது. அதோடு சரி. கோட் படத்திற்கு நடிக்க போய்விட்டார். இந்நிலையில், இப்போது அவசரப்பட்டு இப்போது கட்சி அறிவிப்பை வெளியிட்டு விட்டோம் என விஜயே வருத்தப்பட்டு வருவதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
தான் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்ததும் தமிழகத்தில் இதை எல்லோரும் பரபரப்பாக பேசுவார்கள் என விஜய் எதிர்பார்த்தார். ஆனால், யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. ஊடகங்களும் தேர்தல் தொடர்பான செய்திகளில் மும்முரம் காட்டி வருகிறார்கள். யாரும் விஜயை பற்றி பேசவே இல்லை. எனவே, பாராளுமன்ற தேர்தல் முடிந்தபின் கட்சி அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என இப்போது யோசிக்கிறாராம் விஜய். அதோடு, இதற்கு காரணமாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதோடு, தற்போது நடித்து வரும் கோட் படம் வெற்றி பெறாமல் போனால் அது தனது அரசியல் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துவிடும் எனவும் நினைக்கிறாராம். ஏற்கனவே, விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரே ஒரு மேடையில் பேசும் விஜயை தவறான ஆட்கள் வழிநடத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். ஒருபக்கம், விஜயின் இடத்தை பிடிக்கப்போவது யார் என்கிற விவாதங்களும் எழுந்து வருகிறது. சிவகார்த்திகேயன் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து பேசினார். எனவே, அவர்தான் விஜயின் இடத்தை பிடிப்பார் எனவும் பலரும் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: 36 முறை மோதிய விஜயகாந்த் – சத்யராஜ் படங்கள் : ஜெயித்தது புரட்சிக்கலைஞரா? புரட்சித்தமிழனா?..
ரஜினியின் இடத்தை பிடித்த நம்முடைய இடத்தை இன்னொரு நடிகர் பிடித்துவிடுவாரா என்கிற கலக்கமும் விஜய்க்கு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் விஜயின் கட்சி லெட்டர் பேடில் இருந்து சொல்லப்படும் செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
எல்லோரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். திராவிட கட்சிகளை நம்பாமல் தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, விஜய் பாஜகவுக்கு ஓட்டுப்போட சொல்கிறாரா என்பதும் தெரியவில்லை. இந்த செய்தி குறித்து விஜய் தரப்பு இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதுவும் ஒருபக்கம் விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
மொத்தத்தில் அவசரப்பட்டு அரசியல் அறிவிப்பை அறிவித்துவிட்டோம். இன்னும் சில மாதங்கள் கழித்து சொல்லி இருக்கலாம் என விஜய் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.