vijay
vijay

பிரபலமான நடிகராக மாறிவிட்டாலே ரசிகர்களுக்கு பிரைவசி போய்விடும்.. அதாவது மற்றவர்கள் போல அவர்களால் விரும்பும் இடத்திற்கு செல்ல முடியாது.. மற்றவர்கள் போல சகஜமாக போய் ஒரு டீ கடையில ஒரு டீ குடிக்க முடியாது.. ஒரு ஓட்டலில் போய் சாப்பிட முடியாது… ஒரு தியேட்டரில் போய் படம் பார்க்க முடியாது.. எங்கு சென்றாலும் ரசிகர்கள் சூழ்ந்து விடுவார்கள் இதனாலே பிரபலமாகி விட்டாலே பிரவேசிப் போய்விடும். அதனால்தான் திரை பிரபலங்கள் நட்சத்திர ஹோட்டலுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள்.

நடிகர் ரஜினி கூட மாறுவேடத்தில்தான் பல இடங்களுக்கும் இப்போது செல்கிறார். இந்நிலையில்தான், விஜய் மாறுவேடம் போட்டு வெளியே சென்ற சம்பவம் பற்றி ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்பு நடராஜ் ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார். விஜய் சாரின் புலி படத்திற்கு நான்தான் ஒளிப்பதிவு செய்தேன். அப்போது விஜய் ரூமில் இருந்தார். ‘எனக்கு ஃபோன் பண்ணி ரூம்ல இருக்குற ஒரே மன அழுத்தமா இருக்குன்னு சொன்னார்..

நான் அவர்கிட்ட லுங்கி கட்டிட்டு, பனியன் போட்டுக்கிட்டு.. தலப்பா கட்டிக்கிட்டு வெளிய வாங்கன்னு சொன்னேன்.. அதே மாதிரி வந்தார்.. 2 கிலோமீட்டர் தூரம் அப்படியே நடந்து போனோம்.. அங்கு ஒரு லோக்கல் டீக்கடை இருந்துச்சு.. அங்க போய் டீ, வடை சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு ரூம் வரைக்கும் நடந்தே வந்தார்.. இப்பதான் நட்டி எனக்கு ரிலீஃபா இருக்குன்னு சொன்னார்.. அந்த ரெண்டு மணி நேரம் என் வாழ்க்கையில் மறக்க முடியாது’ என்று சொல்லியிருக்கிறார் நட்டி.