சினிமாவிற்கு குட்பையா? திடீரென வைரலாகும் விஜய் குறித்த செய்திகள்

Published on: May 29, 2023
vijay
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய். ஒரு மாஸ் ஹீரோவாகவும் வசூல் மன்னனாகவும் தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டு வருகிறார். சினிமாவில் ஒரு ஒப்பற்ற வளர்ச்சியை அடைந்திருக்கும் விஜய் சமீப காலமாக அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

vijay1
vijay1

இயல்பாகவே அரசியலிலும் ஆர்வம் கொண்டிருக்கும் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல நல்ல உதவிகளை செய்து கொண்டும் வருகிறார். சமீபத்தில் கூட உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசியை போக்கிடும் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள நகரம் ஒன்றியம் போன்ற பகுதிகளில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க அவரது மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது இந்த மதிய உணவால் மக்கள் பலரும் பயன்பெற்றனர்.

vijay2
vijay2

அது மட்டும் இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் சிறப்பாக மதிப்பெண்கள் பெற்ற 10 ,12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளையும் பெற்றோரையும் அழைத்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஜூன் மாதம் 17ஆம் தேதி சென்னை மதுரவாயில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நேரடியாகவே விஜய் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடுவதாக தகவல்கள் வந்துள்ளன .மேலும் அவரது அரசியல் குறித்தும் சில அறிவிப்புகள் இந்த விழாவில் வெளிப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

vijay3
vijay3

இப்படி தனது மக்கள் இயக்கம் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளால் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது விஜய் அரசியலில் காலடி எடுத்து வைக்கும் ஒரு முன் படி என்று தான் கருதப்படுகிறது. இதனால் தன்னுடைய 70ஆவது படத்தோடு தனது சினிமா பயணத்திற்கும் விஜய் முற்றுப்புள்ளி வைப்பார் என்ற தகவல்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க : ஆபாச நாடகமா? எம்.ஆர்.ராதாவை கைது செய்த போலீஸ்! கடைசில என்னாச்சு தெரியுமா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.