Vijay Jyothika: ஜோதிகாவை இப்படியெல்லாம் கிண்டலடிச்சிருக்காரா விஜய்? சீக்ரெட்டை போட்டுடைத்த டான்ஸ் மாஸ்டர்

Published on: November 11, 2024
jyothika
---Advertisement---

Vijay Jyothika: ஜோதிகாவின் ஆட்டிட்யூட்டை பங்கமாய் கலாய்த்த விஜய். நீண்ட வருடங்களுக்கு பிறகு டான்ஸ் மாஸ்டர் நோபில் ஒரு பேட்டியில் கூறியிருப்பது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். 50 வயதை நெருங்கினாலும் இன்னும் அவருக்குள் இருக்கும் அந்த எனர்ஜி பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறது. எப்படி இந்தளவுக்கு எப்போதும் போல இருக்க முடிகிறது என நாளுக்கு நாள் ஆச்சரியப்படுத்தி வருகிறார் விஜய்.

கடைசி படம்: தற்போது விஜய் அவருடைய 69வது படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்தப் படம் தான் விஜய்க்கு கடைசி படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு முழு நேர அரசியல்வாதியாக தன்னுடைய சேவையை தொடர இருக்கிறார். சமீபத்தில்தான் பிரம்மாண்டமாக அவருடைய கட்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார் விஜய்.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: ‘ஸாரி’ கேக்க முடியாது… விஜய் சேதுபதியை எதிர்த்த போட்டியாளர்?

மக்களால்தான் இந்தளவு ஒரு பெரிய இடத்தை அடைந்திருக்கிறேன். என்னை இந்தளவு உச்சத்தில் வைத்த மக்களுக்காக எதாவது செய்யவேண்டும் என்ற நோக்கத்தில்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என அந்த மாநாட்டில் கூறி கூஸ் பம்பை எகிற வைத்தார். அவர் நடித்துக் கொண்டிருக்கும் இந்த 69வது படம் கண்டிப்பாக ஒரு அரசியல் பேசும் படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஓவர் ஆக்டிங் ஜோதிகா: விஜயுடன் சேர்ந்து ஜோதிகா இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். திருமலை மற்றும் குஷி ஆகிய படங்களில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிக்கும் படியாக இருந்தது. இந்த நிலையில் டான்ஸ் மாஸ்டர் நோபில் ஜோதிகா பற்றிய சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது ஜோதிகாவை பொறுத்தவரைக்கும் 9 சொன்ன 99 பண்ணுவாங்க. எல்லாமே எக்ஸ்பிரஷனில் கலக்கியிருவாங்க என்று கூறினார் நோபில்.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: படிச்சவங்க எப்படி நடந்துப்பாங்க… கேப்டனை ‘ரோஸ்ட்’ செய்த விசே

இந்த நிலையில் விஜய் மற்றும் ஜோதிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை படமாக்கி கொண்டிருந்தார்களாம். அப்போது விஜய் சம்பந்தப்பட்ட காட்சி முடிந்து விட நீங்க வேணும்னா போங்க என விஜயை சொல்லியிருக்கிறார்கள். அடுத்ததாக ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது விஜய் ‘இருங்க.. அவங்களுக்கு சாதாரண ஸ்டெப்தான். ஆனால் மூஞ்சிலே காட்டும் பாருங்க எக்ஸ்பிரஷன். அதுல எல்லாத்தையும் சாச்சு புடும். பாத்துட்டு போறேன்’ என சொல்லியிருக்கிறார்.

jyothika
jyothika

இதை டான்ஸ் மாஸ்டர் நோபில் சொல்லும் போது விஜய்சாரை பொறுத்தவரைக்கும் அவருடைய காட்சி முடிந்தாலும் மற்றவர்கள் எப்படியெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை கவனிக்கும் பழக்கமுடையவர் என்றும் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.