ஆல் ஏரியாவும் அண்ணன் ஏரியாதான்! ‘கோட்’ படத்தால் பெரிய சாதனை செய்யப் போகும் விஜய்
Goat Vijay: கோட் படம் குறித்து அவ்வப்போது சோசியல் மீடியாவில் பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் , சினேகா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோட். இந்தப் படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் போன்ற பல நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட கோட் படத்தின் மூன்று பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இருந்தாலும் படத்தை மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு போக வேண்டும் என்ற வகையில் தயாரிப்பு தரப்பில் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: வாலிக்கே வராத நேரத்தில் கருணாநிதி போட்ட வார்த்தைகள்… எம்ஜிஆருக்கு செம பொருத்தமா இருக்கே..!
கோட் படத்திற்காக இதுவரை இல்லாத அளவில் இந்தப் படத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் பண்ணப் போவதாகவும் வெங்கட் பிரபு தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். அதாவது 14000 அடி உயரத்தில் கோட் படத்திற்காக ப்ரோமோஷன் செய்ய இருப்பதாக அதுவும் மலேசியாவில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.
மேலும் விஜய் படம் என்றாலே ஒரு தனித்துவம் இருக்க வேண்டும். அதுதான் ரசிகர்களும் விரும்புவார்கள். மேலும் விஜய் அரசியலில் தீவிரமாக இறங்கிய பிறகு வெளியாகும் படம் என்பதால் கோட் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இதையும் படிங்க: என்னால இதெல்லாம் முடியாது… மலர் டீச்சரை அழ விட்ட படக்குழு…
பெரும்பாலும் ஒரு பெரிய பட்ஜெட் படம் ரிலீஸாகும் போது கூடவே சின்ன பட்ஜெட் படங்களும் வெளியாகுவது வழக்கம்தான். சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஒரு 100 ஸ்கீரின் கிடைத்தாலே போதும் என்று பெரிய நடிகர்கள் படங்களாக இருந்தாலும் பரவாயில்லை என துணிந்து சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்யத்தான் செய்வார்கள்.
ஆனால் கோட் படம் ரிலீஸ் சமயத்தில் வேறெந்த படங்களும் வெளியாகாதவாறு தமிழ் நாட்டில் இருக்கும் அத்தனை ஸ்கீரின்களிலும் கோட் படத்தை மட்டும்தான் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். இதுவே பெரிய சாதனை என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் 8 ல் களமிறங்கும் பிரபல நடிகர்! இனி அண்ணனோட ஆட்டத்தை பார்ப்போம்
இதுவரை தமிழில் வேறெந்த படங்களுக்கும் மொத்த ஸ்கீரினும் கிடைத்ததில்லை என்றும் கோட் படத்திற்குத்தான் முதன் முறை என்றும் சொல்லப்படுகிறது.இது ஒரு வேளை கலெக்ஷனை அள்ளுவதற்கான வழியாக கூட இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் 1100 ஸ்கீரின்கள் இருக்கின்றன. அத்தனை ஸ்கீரின்களிலும் கோட் படம்தான் ரிலீஸாக இருக்கிறது.