ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரஜினிகிட்ட விஜய் கத்துக்கணும்… மாறுவாரா தளபதி?..

Published on: November 25, 2023
vijay
---Advertisement---

Vijay rajini: ரஜினி சினிமாவில் அறிமுகமானபோது கமல்ஹாசன் பெரிய ஸ்டாராக இருந்தார். முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்தில் கமலுடன் இணைந்துதான் ரஜினி நடித்தார். அதன்பின் பல திரைப்படங்களிலும் கமலுடன் இணைந்தே ரஜினி நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து தனித்தனியாக ஹீரோவாக நடிக்க துவங்கினர்.

ரஜினி ஆக்‌ஷன் ரூட்டை பிடித்து பயணம் செய்ய கமலோ நல்ல கதையம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் வேடங்களில் நடித்தார். இருவருக்கும் ரசிகர்கள் உருவானார்கள். ஆனால், ரஜினியின் படங்கள் அதிக வசூலை பெறவே அவர் சூப்பர்ஸ்டாராகிவிட்டார். ஆனாலும், ரஜினியும், கமலும் எப்போதும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: நான் திறமையான நடிகன்… அதிர்ஷ்டத்தில் ஹீரோவான ரஜினிகாந்த்… ராதாராவி சொல்லும் சூடான சம்பவம்..!

இப்போது விஜய் – அஜித் போல 90களில் ரஜினி – கமல் ரசிகர்கள் மோதிக்கொள்வார்கள். அதேநேரம் ரஜினி – கமலுக்கு இடையே போட்டி இருந்தாலும் அவர்களுக்குள் பொறாமை என்பது இருந்ததே இல்லை. கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்துவிட்டு நள்ளிரவு 2 மணிக்கு கமலின் வீட்டுக்கு போய் ‘அவரை பார்க்காமல் போக மாட்டேன்’ என அடம்பிடித்து அவரை பாராட்டிவிட்டு வந்தவர்தான் ரஜினி.

அதேபோல், கமல் நடித்த படங்களை பார்த்தால் முதல் ஆளாக தொலைப்பேசியில் அவரை பாராட்டுவார். பொது விழாக்களில் சந்தித்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டிக்கொள்வார்கள். சமீபத்தில் தலைவர் 170 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்தது.

இதையும் படிங்க : 3 மணி நேரம் உட்கார்ந்து பார்த்து போரடிச்ச திரைப்படங்கள்! ‘அஞ்சான்’ படத்தால் மார்கெட் இழந்த லிங்குசாமி

அப்போது கமலை பார்க்க ரஜினி ஆசைப்பட, நானே வருகிறேன் என ரஜினி இருக்கும் இடத்திற்கு போனார் கமல். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியானது. இது மட்டும்தான் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், அதன்பின் ஒன்று நடந்துள்ளது. கமல் நம்மை பாக்க வந்துட்டாரே என நினைத்த ரஜினி சிறிது நேரம் கழித்து இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு போய்விட்டாராம்.

அப்போது கமல் இந்தியன் 2 தாத்தா கெட்டப்பில் இருந்திருக்கிறார். எனவே, அது தொடர்பான புகைப்படங்கள் அவர்கள் வெளியிடவில்லை. இதைத்தொடர்ந்து திரையில் விஜய் போன்ற நடிகர்கள் ரஜினியிடம் இருக்கும் பண்பை கற்றுக்கொள்ளவேண்டும் என சினிமா பத்திரிக்கையாளர்கள் பேச துவங்கியுள்ளனர்.

சமீபத்தில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு ரஜினி பட ஷூட்டிங் நடக்கும் இடத்தின் அருகிலேயே நடக்க, உடனே இடத்தை வேறு இடத்திற்கு விஜய் மாற்ற சொன்னதாக செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் செஞ்ச வேலையில் அஜர்பைசானில் இருந்து கிளம்பிய அஜித்?!.. இது என்னடா அக்கப்போரு!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.