தமிழகமெங்கும் பல ஊர்களில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர் கடையின் முதலாளிதான் லெஜன்ட் சரவணா. துவக்கத்தில் விளம்பர படங்களில் நடித்தார். விளம்பர படங்களில் அவருடன் தமன்னாவும், ஹன்சிகாவும் நடனமாடினார்கள். எனவே சினிமாவில் நடிக்கும் ஆசையும் சரவணாவுக்கு ஏற்பட்டது.
அப்படி உருவான திரைப்படம் தான் லெஜெண்ட். இந்த படத்தில் சரவணாவின் லுக்கையும், அவர் பேசிய வசனங்களையும், சில காட்சிகளையும் ரசிகர்கள் ட்ரோல் செய்தார்கள். படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் கொடி, கருடன் போன்ற திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லீடர் என்கிற படத்தில் நடித்தார் சரவணா. இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது.. இந்த படத்தில் லெஜென்ட் சரவணாவின் லுக்கை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். வீடியோவும் நன்றாகவே உருவாக்கப்பட்டிருந்தது..
அதோடு நேற்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட லெஜென்ட் சரவணா செய்தியாளர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொன்னார்.. குறிப்பாக ‘உங்களுடைய முதல் படம் வெளிவந்த போது பலரும் ட்ரோல் செய்தார்களே’ என்றெல்லாம் கேட்டார்கள். எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் சொன்னார் சரவணா.
செய்தியாளர் சந்திப்புக்கு செல்வதற்கு முன் சரவணனின் நண்பர் ஒருவர் ‘நீங்கள் என்ன பேச வேண்டுமோ அதை மட்டும் பேசிவிட்டு வந்துவிடுங்கள். செய்தியாளர்கள் கேள்வி கேட்டு நீங்கள் பதில் சொல்வது வேண்டாம்.. தேவையில்லாத பல கேள்விகளை கேட்பார்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு ‘எத்தனை நாட்கள் நாம் அப்படி ஓடி ஒளிய முடியும்?.. கேள்விகளை எதிர் கொண்டுதான் ஆக வேண்டும்.. அவர்கள் எப்படிப்பட்ட கேள்விகளையும் கேட்கட்டும்.. பாத்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டு வந்தாராம் சரவணா. சொன்னபடியே எல்லா கேள்விகளுக்கும் அசத்தலான பதில்களையும் சொல்லியிருக்கிறார்.
இந்த தகவலை பிரபல வலைப்பேச்ச்சி யுடியூப் சேனலில் சொல்லி ‘விஜய் இதை கற்றுக்கொள்ள வேண்டும்’ என சொல்லியிருக்கிறார்கள். அரசியல் கட்சி துவங்கி 2 வருடங்கள் ஆகியும் இதுவரை விஜய் செய்தியாளர்களை சந்தித்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.










