ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா!. லியோ படத்தில் இரண்டு விஜய்? - பெயர்கள் என்ன தெரியுமா?
வாரிசு படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விக்ரம் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் என்பதாலும், மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் - லோகேஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாலும் ரசிகர்களிடம் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு மாதம் காஷ்மீரில் நடந்தது. தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படதில் விஜயுடன் அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், திரிஷா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சமீபத்தில் அர்ஜூன் படத்தில் விஜயின் நண்பராக இருந்து எதிரியாக மாறுவர் என செய்தி வெளியானது. மேலும் பாட்ஷா பட ஸ்டைலில் லியோ படத்தின் கதை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கவிருப்பதாக புதிய செய்தி கசிந்துள்ளது. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் லியோ எனவும், மற்றொரு கதாபாத்திரத்தின் பெயர் பார்த்திபன் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இரண்டும் ஒரு விஜயா இல்லை விஜய்க்கு இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களா என்பது தெரியவில்லை.
ஒருவேளை பாட்ஷா ரஜினி மாணிக்கமாக வாழ்ந்தது போல, லியோவாக கேங்கஸ்டராக இருக்கும் விஜய் தன்னை மறைத்து பார்த்திபன் என்கிற பெயரில் வாழ்வாரா என்பதும் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இந்த செய்தி விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. மேலும் ஒரு செய்தியாக, சஞ்சய் தத்தின் தம்பியாக அர்ஜூன் நடித்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.