ஷாரூக்கானை மிஞ்சிய விஜய்! இந்திய அளவில் முதலிடத்தை பிடிக்கும் தளபதி
Vijay: இந்திய அளவில் முதல் இடத்திலிருந்த ஷாருக்கான் தனது தளபதி 69 படத்தின் மூலம் பின்னுக்கு தள்ளி இப்போது விஜய் முதல் இடத்தில் இருப்பதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் விஜய். தனது ஒவ்வொரு படங்களிலும் தன்னுடைய அடுத்தடுத்த வெவ்வேறு பரிணாமங்களினால் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கிறார் விஜய்.
இவருடைய படங்களுக்கு இதுவரை தமிழ் சினிமாவில் நல்ல ஒரு ஓப்பனிங் இருந்து வருகிறது. கோலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தியே விஜய் தான். அதுவும் இவருடைய வசூல் ஒவ்வொரு படங்களுக்கும் அதிகமாகிக் கொண்டே தான் போகின்றது. அதற்கேற்ற வகையில் தன்னுடைய சம்பளத்தையும் விஜய் அதிகப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்.
இதையும் படிங்க: தளபதி69 படத்தின் டைட்டில் இதுதானா? ரைட்டு பிரச்னை படுஸ்பீடுல வருதுனு சொல்லுங்க…
சமீபத்தில் அவர் நடித்து வெளியான கோட் திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. மல்டி ஸ்டார் படமாக வெளிவந்த கோட் திரைப்படம் விஜய்க்கு ஒரு நல்ல ஒரு ஓப்பனிங்காகவே இருந்தது. இதுவரை படத்தை திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.
இந்த நிலையில் நேற்று அவருடைய 69 ஆவது படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. கேபிஎன் புரொடக்சன் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் தான் அவருடைய 69ஆவது திரைப்படம். இந்த படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைக்கிறது கேபிஎன் புரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம்.
இதையும் படிங்க: கோவா டிரிப் பாடகியிடம் மடங்கிய ஜெயம் ரவி… இதனால்தான் ஆர்த்தி ரவியிடம் விவாகரத்தா?
இதற்கு முன் தெலுங்கில் ஆர்ஆர்ஆர் போன்ற மிகப்பெரிய பட்ஜெட் உள்ள திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் தான் இது. அதனால் இந்தப் படமும் ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் விஜயின் இது கடைசி திரைப்படமாக இருப்பதால் இது அரசியல் சார்ந்த படமாக தான் உருவாகப் போகிறது.
இந்த நிலையில் தளபதி 69 படத்திற்கு விஜய் வாங்க கூடிய சம்பளம் பற்றிய ஒரு தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது .இதுவரை 200 கோடி விஜய் சம்பளமாக பெற்று வருகிறார் என்ற ஒரு தகவல் இருந்த நிலையில் இந்தப் படத்திற்கு 275 கோடி சம்பளமாக பெறுகிறார் விஜய்.
இதையும் படிங்க: எக்ஸில் மணிமேகலைக்கு குவியும் சப்போர்ட்… அசிங்கப்படும் விஜே பிரியங்கா…
இதன் மூலம் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஷாருக்கான் முதல் இடத்தில் இருந்தார். அவருடைய சம்பளம் 250 கோடியாக இருந்தது. ஆனால் தளபதி 69 படத்திற்குப் பிறகு ஷாருக்கான் இடத்தை விஜய் இப்போது தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. இந்த ஒரு தகவல் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.