ஆர்.ஜே.பாலாஜி சொன்ன கதையில் நடிக்க சம்மதித்த விஜய்!. அட இது எப்படா நடந்துச்சி!...

rj balaji
ரேடியோ ஜாக்கியாக வேலை செய்து கொண்டிருந்த பாலாஜியை இயக்குனர் சுந்தர்.சி தான் இயக்கிய ‘தீயா வேலை செய்யணும் குமார்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வைத்தார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஹீரோக்களின் நண்பராக சில படங்களில் நடித்தார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக படம் முழுக்க வருவார். படத்தின் பல இடங்களில் ரசிகர்களை சிரிக்கவும் வைத்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரஜினிகிட்ட விஜய் கத்துக்கணும்… மாறுவாரா தளபதி?..
ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் நடிக்க துவங்கினார். அப்படி வெளியான முதல் படம் எல்.கே.ஜி. இப்போதுள்ள அரசியல் சூழ்நிலைகளை யதார்த்தமாகவும், நகைச்சுவையுடனும் சொல்லி இருப்பார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே தொடர்ந்து ஹீரோவாக நடிப்போதும் என்கிற நம்பிக்கை அவருக்கு வந்தது.
அதன்பின் மூக்குத்தி அம்மன் என்கிற கதையை எழுதி அவரே இயக்கினார். இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். போலி சாமியார்களின் முகமுடியை கிழித்து எறியும்படி கதை, திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல், வீட்ல விசேஷங்க என்கிற படத்திலும் நடித்தார்.
இதையும் படிங்க: நான் திறமையான நடிகன்… அதிர்ஷ்டத்தில் ஹீரோவான ரஜினிகாந்த்… ராதாராவி சொல்லும் சூடான சம்பவம்..!
இவர் விஜயிடம் ஒரு கதை சொல்லி சம்மதம் வாங்கினார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?. உண்மையில் அது நடந்தது. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி ‘வாரிசு படம் துவங்குவதற்கு முன் விஜய் சாரை சந்தித்து கதை சொன்னேன். அது அவருக்கு பிடித்திருந்தது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பை முடித்துவிடலாமா என கேட்டார். அடுத்த வருடம் என நினைத்தே சரி என்றேன். ஆனால், அவர் சொன்னது இந்த வருடம்.
இல்லை சார். உங்களை வைத்து இயக்கும் படம். எனவே, அது சிறப்பாக வரவேண்டுமெனில் எனக்கு இன்னும் ஒரு வருடம் தேவைப்படும். உங்களின் 78வது படமாக கூட நான் அதை இயக்கினாலும் எனக்கு சந்தோஷம்தான்’ என சொல்லிவிட்டு வந்தேன். கண்டிப்பாக அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன்’ என ஆர்.ஜே.பாலாஜி கூறினார்.
இதையும் படிங்க: அஜித் நடிப்புல ஒழுக்கம் இருக்கு! ஆனால் விஜய் அப்படி இல்ல – வருங்கால தளபதியை கிழித்து தொங்கவிடும் இயக்குனர்