குடும்பமா போய் நடிகர் விஜயை சந்தித்த நடிகை ரம்பா... அப்ப பார்த்த மாதிரியே இருக்கே... சுத்தி போடுங்கப்பா...!
நடிகை ரம்பா குடும்பத்துடன் சென்று நடிகர் விஜயை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தொடை அழகி என்று சொன்னால் முதலில் ஞாபகத்திற்கு வருவது நடிகை ரம்பாவை தான். 90ஸ் கிட்ஸ்-களுக்கு கனவு கன்னியாக இருந்த இவர் மிக சிறந்த நடிகையாக வலம் வந்தார். இவரின் உண்மையான பெயர் விஜயலட்சுமி. சினிமாவிற்காக ரம்பா என்று பெயர் மாற்றிக் கொண்டார்.
தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து சுந்தர புருஷன், சிவசக்தி, செங்கோட்டை, அடிமை சங்கிலி, அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், குங்குமப்பொட்டு கவுண்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார்.
இவர் கடைசியாக 2010 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜுடன் இணைந்து விடியும் வரை கத்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கடைசி வரை வெளியாகவில்லை. அதை தொடர்ந்து அதே வருடம் இலங்கை தமிழரான இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.
இவர்கள் குடும்பமாக வெளிநாட்டில் வசித்து வருகின்றார். அவ்வப்போது தமிழ்நாட்டிற்கு வந்து செல்வார். திருமணத்திற்கு பிறகு பல ரியாலிட்டி ஷோக்கலில் கலந்து கொண்ட இவர் நடுவராக இருந்து வந்தார். தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் நடிகை ரம்பா மற்றும் அவரது குடும்பத்தினருடன் நடிகர் விஜய் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்த ரம்பா தெரிவித்திருந்ததாவது "பல வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்திருந்தார். இந்த புகைப்படங்களுக்கு கீழ் தமிழக வெற்றி கழகம் என்ற ஹேஸ்டேக்கையும் அவர் பகிர்ந்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் விஜய் ரம்பாவின் மகனை தூக்கிக் கொஞ்சிய புகைப்படங்கள், ரம்பாவின் மகள்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயுடன் ரம்பாவை பார்த்த ரசிகர்கள் பலரும் செம க்யூட்டாக இருக்காங்க என்று கூறி வருகிறார்கள்.